ஆன்மிக கேள்வி பதில்கள்


1. "தெய்வ உலா'' என்று அழைக்கப்படும் நூல்?
திருக்கயிலாய ஞான உலா.

2. திருநாவுக்கரசரை எந்த நோயால் இறைவன் ஆட்கொண்டார்?
சூலை நோய் என்னும் வயிற்று நோய்.


3. "திராவிடசிசு" என்று போற்றப்படுபவர் யார்? அவருக்கு இந்த பெயரைச் சூட்டியது யார்?
சம்பந்தர், ஆதிசங்கரர்.

4. சுந்தரருக்குப் பெற்றோர் இட்ட பெயர்?
நம்பியாரூரர்.

5. வழிப்பறி செய்து திருமாலுக்கு தொண்டு செய்த ஆழ்வார்?
திருமங்கையாழ்வார்.

6. நவதிருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகரியின் (தூத்துக்குடி மாவட்டம்) புராதனப் பெயர்?
திருக்குருகூர்.

7. "முகுந்தமாலை" என்னும் வடமொழி நூலை எழுதிய மன்னர்?
குலசேகராழ்வார்.

8. திருமாலின் கொப்பூழில் மலர்ந்த தாமரை போன்ற நகரம் மதுரை என்று கூறும் நூல்?
பரிபாடல்.

9. பட்டினத்தாரிடம் சீடராக வந்த உஜ்ஜயினி மன்னர்?
பத்ருஹரி.

10. சித்தர்களின் தத்துவங்களுக்கு மூலமாக இருக்கும் நூல்?
திருமந்திரம்.

நன்றி: தினமலர்.