பிரம்மாவிற்கு தனிக்கோயில் எங்குள்ளது?


1. பிரம்மாவிற்கு தனிக்கோயில் எங்குள்ளது?
புஷ்கர், ராஜஸ்தான்.

2. 'அனுமன் சாலிஸா' என்பதன் பொருள்?
அனுமனின் புகழ் (இந்நூலை எழுதியவர் துளசிதாசர்).

3. அவ்வைக்கு நாவல்கனி கொடுத்தவர்?
முருகப்பெருமான்.


4. நாலாயிரதிவ்ய பிரபந்தங்களைத் தொகுத்தவர்?
நாதமுனிகள்.

5. நம்பியாண்டார் நம்பி அவதரித்த தலம்?
திருநாரையூர்.

6. திருமங்கையாழ்வாரின் மனைவி?
குமுதவல்லி.

7. தனது பிள்ளைகளுக்கு நாவுக்கரசரின் பெயரை வைத்த சிவபக்தர்?
அப்பூதியடிகள்.

8. காய்ச்சல், விஷஜுரம் நீங்க வழிபடவேண்டிய தெய்வம்?
ஜுரதேவர்.

9. நீலகண்ட தீட்சிதர் மீனாட்சிஅம்மன் மீது பாடிய பாடல்?
ஆனந்த சாகர ஸ்தவம்.

10. நம்பிராஜனின் மகளாக வளர்ந்த வேடர்குலப்பெண்?
வள்ளி.

நன்றி: தினமலர்.