கணபதி மந்திரம்
      எந்த நல்ல காரியத்தை தொடங்கும் முன்னரும் கணபதியை நினைத்து இந்த மந்திரத்தை சொல்லி ஆரம்பித்தால், நல்லபடியாக நடக்கும்.

சித்தி புத்தி வினாயகரே
சிங்கார கணபதியே முக்தி தரும் மூலவனே
மூஷிக வாகனனே
முருகனுக்கு மூத்தவனே
முக்கண் பெற்றவனே
கருணைக்கும் கைகொடுக்கும்
கணபதியே காப்பாவாய்
அரசமரம் உன்வீடு
ஆலயங்கள் தனிவீடு
கரங்கள் ஐந்துடனே
காத்திட வந்திடப்பாய்
மாம்பழம் பெற்றவனே
மனக்கவலை தீர்ப்பவனே
ஓம் எனும் மந்திரத்தில்
ஒலி வடிவானவனே

குளக்கரையில் குந்திடுவாய்
குடும்பங்களை காத்திடுவாய்
நாட்டைக் காத்திடுவாய்
நன்மையெல்லாம் தந்திடுவாய்
மஞ்சளில் நீ வருவாய்
மாட்டுசாணத்திலும் கொஞ்சியே
நல்ல காரியங்கள் தொடங்கையிலே
கை கொடுப்பாய்

ஆயிரம் வெற்றிகளை அள்ளிக்குவித்திடுவாய்
கொம்பு ஒடிந்து செய்திடுவாய்
கொம்பு ஒடிந்து எழுந்திடுவாய்

நம்பிக்கை தந்திடுவாய்
தும்பிக்கை நாயகனேsource   http://hindusamayam.forumta.net/-f3/-1-t177.htm