ஆரோக்கியமாய் வாழவைக்கும் ஆடாதொடை இலை


    ஐம்பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை அடிப் படைத் தத்துவங்க ளாக்கி எங்களைப் படைத்த இறைவனே!

புலன் நுகர்ச்சியே நோயாய்ப் பரிணமிக் கும் என்று சொல்லும் பரம்பொருளே! ஐம் புலன்களைப் படைத்து எம்மை ஆசாபாசங்க ளைப் பார்க்கச் செய்கி றாய்; கேட்கச் செய்கி றாய்; பசிக்கு உணவு என்பதை மறக்கச் செய்து எங்களை ருசிக்கச் செய்கிறாய்.


உன்னைத் தீண்டி இன்புற வேண்டிய நாங்கள் மண்ணையும் பொன்னையும் பெண்ணையும் தீண்டி இன்புற்று, நுகர்ச்சி யின் அடிப்படையில் நோயை நாடி விடுகி றோம். அதனால் எம்மை முழுமையாய் உம்மில் கரைப்பது இயலாததாகி விடுகிறது.

உம்மால் ஆட்கொள்ளப்பட்ட மாணிக்க வாசகர், "எம் தந்தையாக விளங்கும் சிவ பெருமானே! ஒளி பொருந்தியவனே! கொடிய போர்க்களத்தில் போரிடும் யானைகளின் காலடியில் சிக்கி செடி, கொடிகள் அழிவது போல், ஐம்புலன்கள் படுத்தும் பாட்டால் நான் மிகவும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இத்தகைய துயரத்தில் என்னை உழல விடாதே! தீவினை கொண்ட அடியேனின் உள்ளத்தில் தேன், பால், கரும்புச்சாறு, அமுதம் போன்று இனிமையைத் தந்து, அதற்கு அடையாள மாக என் சதையையும் எலும்பையும் உருகச் செய்து, உன் நினைவி லேயே இருக்கும்
பரவசத்தை எனக்குத் தருவாயாக' என்று இறைஞ்சினார்.

அதுபோல நாங்க ளும் உம்மிடம் புலன் நுகர்ச்சியை அடக்க இயலாமல்தான் புலம்பு கிறோம். உம் கருணை யினால் எமக்கு உம் அருளாசி பெற்ற மருந்துகளை அடையாளம் காட்ட வேண்டுகிறோம். வாழும் வரை நோயின்றிப் போராட உம் ஆசி பெற்ற ஆடாதொடையைச் சரணடைந்து நலம் பெற முனைகிறோம். சிவனே!

இனிமையான குரல் வளம் பெற...

ஆடாதொடையை மருந்தாக பாவித்தால், கடுமையான சளித் தொந்தரவுகள் அத்தனை யும் மாயமாய் மறையும். ஆடாதொடையை அரைத்துச் சாறெடுத்து, தினசரி காலையில் 15 மி.லி. வீதம் சாப்பிட்டு வர, இனிமை யான குரல்வளம் உண்டாகும். கடுமையான இருமல், இளைப்பு, காய்ச்சல் கண்டிருக்கும்போதும் இதன் சாற்றை தினசரி இரண்டு வேளை மேற் சொன்ன அளவில் பருகி வந்தால் எளிதில் நிவாரணம் பெறலாம்.

இருமலுக்கு எளிய மருந்து...

ஆடாதொடை இலை ஐந்து எண்ணிக்கை யில் எடுத்து அரிந்து, அத்துடன் சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, அதிமதுரம், ஏலக்காய் ஆகியவற்றை வகைக்கு ஐந்து கிராம் சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க விடவும்.

கஷாயம் பாதியாகச் சுண்டும் சமயம் 100 மி.லி. தேனையும் சேர்த்துக் கொதிக்கவிடவும். 50 கிராம் காய்ந்த திராட்சையை விழுதாய் அரைத்து, அதையும் கலந்து கொதிக்கவிட்டு நன்கு வடிகட்டிக் கொள்ளவும். இதில் 30 மி.லி. அளவு மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வர, மாதக்கணக்கில் பாடாய்ப் படுத்தும் இருமலும் பஞ்சாய்ப் பறந்து போகும். சைனஸ், மூக்கடைப்பு, தும்மல், தொண்டைக்கட்டு போன்ற நோயில் அவதிப்படுகிறவர்களும், சிரமம் பார்க்காமல் இதனைத் தயாரித்து முறையாகச் சாப்பிட்டு வருவார்களே யானால், எம்பெருமான் சிவன் அவர்களை எளிதில் குணமாக்கி நலமுறச் செய்வார்.

வாதநோய், மூட்டுவீக்கம் விலக...

நாம் காசு பணம் சேர்க்கிறோமோ இல்லையோ- நல்ல உடல்நலத்தை மட்டும் காலத்திற்கும் சேர்த்து வைக்க வேண்டும்.

நாம் யாருக்கும் பாரமில்லை என்கிற போது, வாழ்க்கை சுவையாக இருக்கும். நடப்ப தற்கும் சாலையைக் கடப்பதற்கும் கழிவறை செல்வதற்கும் பிறரை நாடும் தன்மையைக் கொண்டு விட்டால் வாழ்க்கை எண்ணி லடங்கா சுமையாகி விடும். நம் உடம்பின் எலும்புகளே நமது தூண்கள். அதில் உண்டாகும் தொற்றுக்களை (ஒய்ச்ங்ஸ்ரீற்ண்ர்ய்ள்) அவ்வப்பொழுது களைந்துவிட வேண்டும்.

கடுமையான மூட்டுவலி, முடக்கு வாதம், இடுப்பு வாதம், முதுகுவலி, கழுத்துவலி, கால்வீக்கம், மூட்டுவீக்கம் போன்ற குறைபாடு களைக் களையும் எம்பெருமான் அருளிய சிறப்பான மருந்தொன்றைச் சொல்கிறேன். கவனமாய்க் குறிப்பெடுத்து, வாழ்க்கையைச் சுவையாக்கிக் கொள்ளுங்கள்.

ஆடாதொடை, நிலவேம்பு, வாத நாராயணா, முடக்கத்தான், சீந்தில் ஆகிய வற்றை தனித்தனியே உலரவைத்து, வகைக்கு 50 கிராம் எடுத்துக் கொள்ளவும். சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, வாய்விளங்கம், பூனைக் காலி விதை, அமுக்கரா வகைக்கு 25 கிராம்; கடுக்காய், அதிமதுரம், வெள்ளரி விதை, பூசனி விதை வகைக்கு 50 கிராம் எடுத்து இவை அனைத்தையும் ஒன்றாக்கித் தூள் செய்து கொள்ளவும். இதில் ஐந்து கிராம் அளவு காலை- மாலை இருவேளையும் சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் அருந்தி வரவும். தினசரி ஏதேனும் கீரை அல்லது காய்கறி சூப் இத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வர வேண்டும். இம்மருந்தினைத் தொடர்ந்து 48 நாட்களுக் குச் சாப்பிட்டுப் பாருங்கள். நாம் யாருக்கும் பாரமில்லை என்பதை அபாரமாய் உணர்வீர்கள்.

மேலும் வெளி உபயோக மருந்தொன்று சொல்கிறேன். ஆடாதொடை, வாதநாரா யணா, நுணா இலை ஆகியவற்றை வகைக்கு ஒரு கைப்பிடி அளவு எடுத்து, இத்துடன் 50 கிராம் உளுந்து, அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் மஞ்சள் ஆகியவற்றை எடுத்து, முட்டையின் வெள்ளைக் கரு விட்டு நன்கு அரைத்து மூட்டு வீக்கம், மூட்டு வாதம், இடுப்புவலி, கழுத்துவலி உள்ள இடங்களில் பத்துப் போட்டு, ஒரு மணி நேரம் கழித்து வெந்நீரில் கழுவ வேண்டும். மேற்கண்ட பிணிகள் தீர்ந்து நூறாண்டுகள் நலமுற வாழலாம்.

உடல் பருமன் குறைய...

48 நாட்களில் உங்கள் உடல் எடையை அதிசயமாய்க் குறைக்கும் அற்புத மருந்தினைச் சொல்கிறேன். ஆடாதொடை, வாதநாராயணா, வாய்விளங்கம், அன்னாசிப்பூ, சுண்டை வற்றல், ஓமம் ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் எடுத்து ஒன்றாகத் தூள் செய்து பத்திரப் படுத்தவும். பின்னர் 600 கிராம் பூண்டு வாங்கி உரித்து விழுதாய் அரைத்து, மூன்று லிட்டர் தண்ணீரில் பூண்டைக் கரைத்து, பாத்திரத் தின் வாய்பகுதியில் சுத்தமான வெள்ளைத் துணியைக் கட்டி, அதன்மேல் ஏற்கெனவே தயாரித்து வைத்துள்ள சூரணத்தைக் கொட்டி, பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறுதீயாய் எரியவிட்டு புட்டு அவிப்பதுபோல் அவிக்க வும். பின்னர் சூரணத்தை எடுத்து நன்கு காய வைத்து மறுபடியும் தூள் செய்து கொள்ள வும். இதனை காலை- இரவு உணவுக்குப்பின் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர, அதிக உடல் எடை, நீர்க்கோர்வை, உடல் உள்ளுறுப்பு களின் வீக்கத்தால் உண்டாகும் உடல் பருமன், மாதவிடாய்க் கோளாறுகளால் உண்டாகும் உடல் பருமன், தைராய்டு கோளாறு களால் உண்டாகும் உடல் பருமன் போன்றவை குணமாவதை நீங்களே உணர்வீர்கள்.
காசநோய் குணமாக...

ஆடாதொடை இலை, நிலவேம்பு, கண்டங்கத்திரி, முசுமுசுக்கை, சீரகம் ஆகிய வற்றை வகைக்கு 50 கிராம் எடுத்து, ஒரு லிட்டர் தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து பாதியாகச் சுண்டச் செய்து இறக்கவும். தினசரி காலை வெறும் வயிற்றில் 200 மி.லி. அளவு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் காசநோயைக் கண்ணுக்குத் தெரியாமல் விரட்டலாம்.

நோய் என்பது இந்த உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகளுக்கும் பொதுவானது. பிறப்பு- இறப்பு, இன்பம்- துன்பம், மேடு- பள்ளம், பகல்- இரவு எல்லாம் பொதுவானது. யாருக்கும் சொந்தமில்லாத இந்த உலக வாழ்வை இருக்கும் வரை பந்தமுடன் வாழ, எம்பெருமான் பாதம் பற்றி, அவர் கடைக் கண் காட்டும் கற்ப மூலிகைகளை மருந்தாக்கி நலமுற வாழ்வோம்!நன்றி நக்கீரன்