உன்னைப்போல் பிறரை நடத்து


* எதையும் செய்துவிடும் சக்தி தனக்கு உண்டு என்று மனிதன் பெருமையடித்துக் கொள்ளும் நேரத்தில், கடவுள் அவனுடைய அகம்பாவத்தை அடக்கி விடுகிறார்.
* உடலும் உள்ளமும் தூய்மையாக இருக்கும் அளவைப் பொறுத்து தான் உடல் நலமும் மனவளமும் அதிகரிக்கிறது.

* எண்ணம் என்பது மகத்தானதாகவும் புதுமையானதாகவும் இருந்தால் அதன் விளைவு எப்போதுமே மகத்தானதாகவும், புதுமையானதாகவும் இருக்கும்.
* நம்பிக்கையும் வழிபாடும் இல்லாமல் செய்கிற எந்த வேலையும் நறுமணமில்லாத செயற்கைப் புஷ்பம் போன்றதாகும்.

* நம்மைப் பிறர் எப்படி நடத்த வேண்டும் என்று எண்ணுகிறோமோ, அதே போல் நாம் பிறரையும் நடத்த வேண்டும்.

* ஆணவக்காரர்களின் போற்றுதலுக்கும், தம்முடன் ஒன்றை விரும்பிப் பேரம் பேசுவோரின் பிரார்த்தனைக்கோ ஆண்டவன் ஒரு போதும் செவி சாய்ப்பதில்லை.
- காந்திஜி

பொறுமைக்கு பலன் நிச்சயம்* கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் உண்டு என ஏற்றுக்கொண்டால் நன்மை நமக்குத் தான். 
* பிரார்த்தனை என்பது மனிதனை கடவுளுடன் சேர்க்கும் பாலமாகவும், பேசுவதற்குரிய வாய்ப்பாகவும் இருக்கிறது.
* உண்மையான பிரார்த்தனைக்கு கடவுள் செவி சாய்க்க மறுப்பதில்லை. பெரிய செயலையும் எளிதாக செய்யும் ஆற்றலை கடவுளிடம் இருந்து ஒருவரால் பெற முடியும். 
* மனதை ஒருமுகப்படுத்தி பிரார்த்தனையில் ஈடுபட பொறுமை அவசியம். ஆழமான பக்தி கொண்டவர்கள் எளிதாக கடவுள் சிந்தனையில் ஈடுபடுவர். மற்றவர்கள் பொறுமை பெற சில காலம் ஆனாலும், முயற்சியை கைவிடக் கூடாது. பொறுமையுடன் செய்யும் முயற்சிக்கு பலன் நிச்சயம்.
* பிறர் மீது அன்பு காட்டுபவர், கடவுளுக்கு பிடித்தமானவர். அன்பு நெஞ்சம் கொண்டவர் கடவுளின் அருளை எளிதாகப் பெற்றுவிடுவார். 
- காந்திஜி 

மனம் சுத்தமாக இருக்கட்டும்!
* உண்ணாவிரதம் இருக்காமல் பிரார்த்தனை செய்ய முடியாது, பிரார்த்தனை செய்யாமல் உண்ணாவிரதம் இருக்க முடியாது.
* கடவுளிடம் காணும் பரிபூரணத்துவத்தை வணங்குவதே தூய வழிபாட்டு நெறிமுறை. அவர் மட்டுமே சத்தியமானவர்.

* வாழ்க்கையாகிய சமுத்திரத்தில் நாம் சிறு துளியே. எனவே, அனைத்து உயிர்களுடனும் ஒன்றுபட்டு ஒரே அம்சமாகத் திகழ வேண்டும்.

* பகவத்கீதையை கிளிப்பிள்ளையைப் போல பாராயணம் செய்வதால் பலனேதும் இல்லை. அதுகாட்டும் உபதேசப்படி நடந்து காட்ட வேண்டும். 

* யாரை வழிபடுகிறோமோ, அந்த தெய்வம் காட்டியே வழியில் நடப்பதே உண்மையான வழிபாடு. மற்ற பிரார்த்தனைகள் எல்லாம் , நம்முடைய நேரத்தை வீணடிப்பதாகும்.

* மனதைச் சுத்தமாக வைத்துக் கொண்டால், இறைவன் நம் பிரார்த்தனையை அவசியம் கேட்பான்.
* மனதை அலைய விடாமல் கட்டுக்குள் கொண்டு வருவதே உண்மையான வழிபாடாகும்.
- காந்திஜி 
சுயநலம் உள்ளவரை கஷ்டமே!

* பக்திவேறு, கர்மம் வேறு அல்ல; கர்மம் வேறு, ஞானம் வேறு அல்ல. அனைத்தும் ஒரே குறிக்கோளான இறைவனை அடைவதற்கான வழிகளே ஆகும். அவரவர் தன்மைக்கு ஏற்ப எந்த வழியைப் பின்பற்றினாலும் இறுதியில் அடையவேண்டிய லட்சியம் எல்லோருக்கும் ஒன்றுதான். 

* வாழ்வில் நாம் படும் துன்பங்களுக்கும், இன்னல்களுக்கும் அடிப்படை காரணம் நான் வேறு, நீ வேறு என்ற இரட்டை மனோபாவம் தான். மனதில் சுயநலம் இருக்கும் வரை துன்பத்திலிருந்து விலக முடியாது. சுயநலம் உள்ள இடத்தில் என்றும் அமைதி இருப்பதில்லை. 

* குரு ஒருவரைத் தேடு. அவரது திருவடித் தாமரைகளில் திடமான பக்தி கொண்டவனாகிப் பிறவித் துன்பத்திலிருந்து விரைவில் விடுபடு. குருவருளில் நம்பிக்கை கொண்டு மனதை அடக்கப் பழகினால், உள்ளத்தில் உறைந்திருக்கும் தெய்வத்தைக் காணலாம். 
* செல்வத்தாலும், சுற்றத்தாலும், இளமையாலும் யாரும் கர்வம் கொள்ளாதீர்கள். என்றைக்காவது ஒருநாள் இவையெல்லாம் நம்மை விட்டு விலகிச் சென்று விடும். அதனால், வாழ்நாளுக்குள் கடவுளை அறிய முற்படுங்கள். 

* குழந்தைகள் விளையாடிக் களிக்கிறார்கள். வாலிபர்கள் பெண்ணின்பத்தை நாடுகிறார்கள். வயோதிகர்கள் கவலையில் கழிக்கிறார்கள். ஆனால், கடவுளின் மீது பற்றுவைக்க மறந்து விடுகிறார்கள்.
-ஆதிசங்கரர்

தெய்வசிந்தனையில் மூழ்கு!

* உலக வாழ்க்கை பொய், செல்வமும் சுற்றமும் இளைமையும் நிலையானது அல்ல. இதை உணர்ந்து ஆன்மிக வாழ்க்கையில் இறங்குங்கள்.
* குடும்ப வாழ்க்கையிலிருந்து விடுதலை அடைவதுடன், மனதை அடக்குவதன் மூலமே இதயத்தில் இருக்கும் இறைவனைக் காணலாம்.

* மனம் அலையாதிருக்கவும், ஆன்மிக சிந்தனை நிலைத்து நிற்கவும், ஆசையை அடக்கவும் பிரார்த்தனையின் போது தியானம் செய்.

* உறவு, செல்வம், இளமை இவை அனைத்தையும் காலன் ஒரு கணத்தில் விழுங்கி விடுவதால் பொய்யானவற்றை துறந்து விடு. இறைவனை முழுமையாக நம்பி அவனது சிந்தனையில் மூழ்கிவிடு.

* ஒளியின்றி எந்தப் பொருளையும் பார்க்க முடியாது, அதேபோல் ஆன்மிகப்பயிற்சியின்றி, வேறு எந்த விதத்திலும் ஞானம் உதிக்காது.
* பொருளின் மீதுள்ள பேராசையை விடு. உழைப்பால் அடைந்ததைக் கொண்டு திருப்தியடை.
- ஆதிசங்கரர்