சில கேள்வி சில பதில்கள்


1. விபீஷணன் என்பதன் பொருள் என்ன?
பயம் இல்லாதவன்.

2. ஜாம்பவான் என்னும் கரடிகள் தலைவன் யாருடைய அம்சமாகப் பிறந்தவர்?
பிரம்மதேவர்.


3. மார்க்கண்டேயனின் வயது?
என்றும் பதினாறு.

4. குறையொன்றுமில்லை என்று தொடங்கும் பாடலை இயற்றியவர்?
மூதறிஞர் ராஜாஜி.

5. மன்னனாக இருந்தபோது விஸ்வாமித்திரரின் பெயர்?
கவுசிகன்

6. மந்திர ரத்தினம் என்று போற்றப்படுவது எது?
சுந்தரகாண்டம்.

7. நவக்கிரகங்களில் சவுமியன் (அழகு நிறைந்தவர்) எனப்படுபவர்?
புதன்.

8. ஸ்ரீமந் நாராயணனே விரதம் இருக்கும் தினம்?
ஏகாதசி விரதம்.

9. "யாதுமாகி நின்றாய் காளி'' என்று பாடிய புலவர்?
மகாகவி பாரதியார்.

10. அம்பிகை எந்தத் தலத்தில் குயிலாக இருப்பதாக ஐதீகம்?
மதுரை -கடம்பவனக்குயில் (மீனாட்சி).

நன்றி: தினமலர்.