அரசியலில் குதிக்கிறார் பெனசிர் மகள்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி - மறைந்த முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ தம்பதியின் மகள் பக்தவார். இவர், தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளார். இது குறித்து சர்தாரி - புட்டோ குடும்பத்தின் நெருங்கிய நண்பரான சர்மிளா பரூக்கி கூறியதாவது:பக்தவாரின் முடிவை நான் வரவேற்கிறேன். பக்தவாரின் வருகை, சமுதாயத் தில் அடித்தட்டு மக்களுக்காகவும் மற்றும் பிற்படுத்தப் பட்ட மக்களுக்காகவும் பாடுபட்ட அவரது தாயின் (பெனசிர்) பணியை பக்தவார் தொடர்வார். என்றார்.இந்நிலையில், பக்தவாரின் சகோதரரும், பாக்., மக்கள்கட்சி (பி.பி.பி.,) தலைவருமான பிலாவல், கூறுகையில், "தீவிர அரசியலில் நுழைய இருப்பதாகவும் மீடியாக்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. அதில், உண்மை இல்லை,' என்றார்.