
பிரித்தானியாவில் அதிகரித்து வரும் சாலை விபத்துக்களை தடுக்கப் போவதாக அரசு கூறி வந்தது. சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்ட அளவை விட அதிக போதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்டறியும் சாதனம் காவலர் கைகளில் இந்த வருட இறுதிக்குள் வழங்கப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சாதனம் கைகளில் வந்த பின் பிடிபடுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்த மருத்துவரின் ரத்தப்பரிசோதனை முடிவுகள் தேவை இல்லை.பிடிபடுபவர்கள் உடனடியாக நீதிமன்றத்தின் மூலம் தண்டனை கிடைக்கப் பெறுவார்கள்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையத்திற்கும் இந்த சாதனம் ஒன்று விநியோகிக்கப்படும் என்றும் இதன் மூலம் 2012 ஆம் ஆண்டிற்குள் போதை வாகன ஓட்டிகளால் ஏற்படும் விபத்து பெருமளவில் குறையும் எனவும் அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
தற்போது போலிசாரின் கைகளில் போதை அளவை உறுதிப்படுத்தும் கருவிகள் இல்லாததால் பல குற்றங்களும் விபத்துக்களும் நடைபெறுகிறது. இந்த உபகரணத்தின் மூலம் போதையில் உள்ள வாகன சாரதி மட்டுமன்றி அனைவருக்கும் பாதுகாப்பான சூழ்நிலைகள் உருவாகும் என சாலை பாதுகாப்புத்துறை அமைச்சர் மைக் பென்னிங் தெரிவித்துள்ளார்.