பாதிரியார் இலங்கையில் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக புகார்


ஹொலண்ட் நாட்டு பாதிரியார் (ஹொலண்ட், ரொட்டெர்டாம்)இலங்கையில் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக புகார் செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தற்காலிகமாக பணியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு ஒவ்வொரு வருடமும் சுற்றுலா செல்லும் இவர் அங்கு சில அறக்கட்டளை பணிகளையும் செய்து வந்துள்ளதாக கூறப்படுகின்றது. இது தொடர்பான குற்ற சாட்டினை விசாரித்து ரொட்டெர்டாம் கத்தோலிக்க சபையின் தலைவர் இந்த பாதிரியார் நிதி கையாடல் மற்றும் பாலியல் குற்ற சாட்டுக்களில் ஈடுபட்டதனால் விசாரணைகள் முற்றுப்பெறும்வரை தற்காலிகமாக இவரது பணிக்காலம் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.