பாலியல் தொல்லை செய்த பாதிரியார் ரூ.35 லட்சம் நஷ்டஈடு வழங்கினார்!

டியூப்லின்: அயர்லாந்து நாட்டில் ஆர்மாக் நகரை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் ஜோசப் கியூன். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள இரண்டு இளம் பெண்களிடம் இவர் பாலியல் தொல்லைகள் கொடுத்ததாக கூறப்பட்டது.

இதை தொடர்ந்து அவர் மீது டியூப்ளின் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. காவல்துறையினர் வழக்கைப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் அப்பாதிரியாரிடமும் பெண்களிடமும் சமரச பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், அவர் செக்ஸ் குறும்பில் ஈடுபட்ட ஒரு பெண்ணுக்கு ரூ.35 லட்சம் நஷ்டஈடு வழங்கினார். இந்த தகவலை சீன் பிராட்டி தெரிவித்தார். மேலும் செக்ஸ் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பாதிரியார் ஜோசப் கியூன் பணியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.