ஜென் துறவியும் திருடனும்…

                                                     ஜென் துறவியும் திருடனும் …

   ஜென் துறவி ஒருவர் அழகான மலையடிவாரத்தில் வசித்து வந்தார்.  ஒரு நாள் மாலை அவர் வீட்டில் இல்லாதபோது திருடன் ஒருவன் அவருடைய எளிய வீட்டிற்குள் புகுந்து திருட முயற்சிக்கிறான்.  ஆனால் அங்கு திருடுவதற்கு ஒன்றும் இல்லை.
இதற்கிடையில் ஜென் துறவி வீட்டிற்கு திரும்புகிறார்.  வீட்டில் திருடன் இருப்பதையும், திருட ஒன்றும் இல்லாததால் அவன் ஏமாந்து நிற்பதையும் பார்க்கிறார்.
உடனே அவர், “மகனே! நீ வெகு தூரத்தில் இருந்து என்னைத்தேடி வந்துள்ளாய்.உன்னை வெறுங்கையுடன் அனுப்புவது தவறு.  அதனால் தயவுசெய்து எனது அன்பளிப்பாக இந்த உடையை எடுத்துக்கொள்” என்று சொல்லி தான் அணிந்திருந்த உடையை கழட்டி அவனிடம் கொடுக்கிறார்.
திருடன் சற்று திகைத்தாலும் பிறகு சுதாரித்து அந்த துணியை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடிக்கிறான்.
அவன் போனபிறகு நிர்வாணமாக அமர்ந்து வெளியே நிலவைப் பார்க்கும் துறவி எண்ணுகிறார், “பாவம் அவன்! அவனுக்கு பேசாமல் இந்த நிலவைக் கொடுத்து அனுப்பியிருக்கலாம்”.