தங்கத்தை பெற்றுக் கொள்வதற்கான “ஏ.டீ.எம்." இயந்திரம்

              தங்கத்தை பெற்றுக் கொள்வதற்கான “ஏ.டீ.எம்." இயந்திரம்

தங்கம் விநியோகிக்கும் “ஏ.டீ.எம்" இயந்திரமொன்றை துபாய், அபுதாபியிலுள்ள உயர்மட்ட ஹோட்டலொன்று ஆரம்பித்துள்ளது.








“எமிரேட்ஸ் பலஸ்" ஹோட்டலில் ஸ்தாபிக்கப்பட்ட இந்த இயந்திரத்தில் தங்கத்தின் நாளாந்த விலையை வாடிக்கையாளர்கள் அவதானிக்க முடியும். அத்துடன் தேவைக்கேற்ப 10 கிராம் நிறையுடைய தங்கக் கட்டிகளையோ நாணயங்களையோ பெற்றுக் கொள்ளவும் முடியும்.

ஜேர்மனிய தொழில் முயற்சியாளரான தோமஸ் கியஸ் லர் என்பவரின் திட்டத்தின் பிரகாரமே இந்த “ஏ.டீ.எம்." இயந்திரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,245 டொலருக்கும் அதிகமான விலைக்கு உயர்ந் துள்ள நிலையில், தங்க வர்த்தகத்தை ஊக்குவிக்கும் முகமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.