முகமாற்று அறுவைச் சிகிச்சை
உலகின் முதலாவது முழுமையான முகமாற்று சத்திரசிகிச்சையை வெற்றிகரமாக நிறைவேற்றி ஸ்பெயினைச் சேர்ந்த 30 மருத்துவர்களைக் கொண்ட குழுவொன்று சாதனை படைத்துள்ளது.
துப்பாக்கிச் சூடொன்றில் காயமடைந்த நபரொருவருக்கு பிறிதொருவரின் கன்ன எலும்புகள், மூக்கு, உதடுகள், பற்கள் உள்ளடங்கலாக முழு முகத்தையுமே பொருத்தி மேற்படி சாதனையை மருத்துவர்கள் நிறைவேற்றியுள்ளனர்.
பார்சிலோனாவிலுள்ள வால் டி ஹெப் ரோன் பல்கலைக்கழக மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட இந்த 22 மணி நேர முகமாற்று அறுவைச் சிகிச்சையையடுத்து, சிகிச்சைக்குட்பட்ட நபர் தேறி வருவதாக கூறப்படுகிறது.
இதுவரை உலகெங்கும் சுமார் 10 முக மாற்று அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதும், மிகவும் சிக்கலான, முழுமையான சிகிச்சையாக இது கருதப்படுகிறது.
இதற்கு முன்பு முதலாவது முகமாற்றுச் சிகிச்சை 2005 ஆம் ஆண்டில் பிரான்ஸிலுள்ள அமியன்ஸ் நகரில் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது நாயொன்றால் முகப்பகுதி கடித்துக் குதறப்பட்ட இஸபெல் டினோயறி என்ற பெண்மணிக்கு (38 வயது) வேறொருவரின் மூக்கு, நாடி மற்றும் உதடுகள் பொருத்தப்பட்டன.
தொடர்ந்து சீனா, அமரிக்கா ஆகிய நாடுகளில் பகுதியான முகமாற்று அறுவைச் சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப் பட்டன.