தமிழ் நாட்டில் உள்ள விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தாலுக்கா பல சரித்திர நிகழ்வுகளை தன்னுள் கொண்டது
ஓளவையார் பாரியின் மகள்களான அங்கவை சங்கவை இருவருக்கும் திருமணம் நடத்தியதும் சங்ககால தமிழ் புலவன் கபிலர் வடக்கிருந்து உயிர் நீத்ததும் பேரரசனான இராஜராஜ சோழன் பிறந்ததும் ஈங்குதான்
மாவலி சக்கிரவத்தியின் தலையில் கால்பதித்து மண்ணும் விண்ணும் ஈரடியால் திருமால் அளந்ததும் சிவன் முப்புரம் எரித்ததும் திருக்கோயிலூரில்தான்
ஸ்ரீராகவேந்தரின் குருவுக்கும் குருவான ஸ்ரீரகூத்மதீர்த்தரின் மூல பிருந்தாவனமும் ஸ்ரீஞானாநந்தரின் தபோவனமும் இங்குதான் உள்ளன
இத்தனை சிறப்புமிக்க திருக்கோவிலூரில் 15 ஆண்டுகளாக ஆன்மீகம் மற்றும் சமூகத் தொண்டாற்றி வருகிறார் யோகி ஸ்ரீராமானந்தகுரு
குருஜி ஏன்று அன்புடன் அழைக்கப்படும் இவர் 19/06/2010 அன்று திருக்கோயிலூர் நடுநிலைப்பள்ளி ஓன்றில் தமிழ்நாடு இந்துமக்கள் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஏழை மாணவ மாணவிற்களுக்கு இலவச நோட்டுப்புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரண பொருட்கள் வழங்கும் விழாவில் கலந்துக் கொண்டார்
அவரை மாவட்ட உதவி தொடக்க கல்வி அதிகாரி திரு. அருளப்பன்; வட்டார கல்வி ஓருங்கினைப்பாளர் திருமதி ரா. புவனேஷ்வரி இந்துமக்கள் கட்சி நகரப் பிரமுகர் திரு.மணி முன்னிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி சாந்தி வரவேற்றார்
விழாவிற்கு ஸ்ரீநாராயணா மிஷன் தலமைக் காரியதரியும் ஸ்ரீகாமதேனு பாரதிய வைத்தியசாலையின் தலமை மருத்துவருமான டாக்டர் வி.வி. சந்தானம் தலமை தாங்கினார்
500க்கும் ஆதிகமான குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய யோகி ஸ்ரீராமானந்தகுரு நல்ல விழாவை ஆடம்பரம் ஏதும் இன்றி ஏற்பாடு செய்தவர்களை பாராட்டி அனைவருக்கும் ஆசி வழங்கினார்
விழா முடிவில் இந்துமக்கள் கட்சி பிரமுகர் சதீஷ் குமார் புருஷோத்தமன் நன்றி கூரினார்