இலங்கையில் மகோற்சவ விழா
இணு : இலங்கையின் இணு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பரராஜசேகரப் பிள்ளையார் திருக்கோயிலில் மே 03ம் தேதி முதல் மே 21ம் தேதி வரை மகோற்சவ விழா நடைபெற்றது. மே 03ம் தேதியன்று கொடியேற்றத்துடன் துவங்கிய இவ்விழாவில் திருநாவுக்கரசர் கருபூஜை, கைலாசவாகனத் திருவிழா, பிரதோஷ உற்சவம், திருமஞ்சத் திருவிழா, கார்த்திகை உற்சவம், சங்கிராந்தி அபிஷேகம், தங்கச்சப்பறத் திருவிழா, தேர்த்திருவிழா, தீர்த்தத் திருவிழா, திருக்கல்யாண உற்சவம், பிராயசித்த அபிஷேகம், வைரவர் பொங்கல் உள்ளிட்ட வைபவங்கள் நடைபெற்றன. உற்சவ தினங்களில் நாள்தோறும் ஆலயத்தின் அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தெய்வங்கள் அனைத்தும் மாலையில் தினம் ஒரு வாகனத்தில் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் உபயதாரர்கள் சார்பில் நாள்தோறும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் அடியாளர்களின் தாகத்தை போக்க ஆங்காங்கே நீர்,மோர் பந்தல்களும் அமைக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் பலர் பொங்கல் வைத்தும், தேரை வடம் பிடித்து இழுத்தும் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றினர்.