பாவங்களும், துன்பங்களும் விலக

Swine Flu பாவங்களும், துன்பங்களும் விலக

ப்ரஹ்மாண்டம் கண்டயந்தி
ஹரசிரஸி ஜடாவல்லிமுல்லாசயந்தி
ஸ்வர்லோகாதாதாப தந்தி
கனக கிரி குஹா கண்ட சைலாத் ஸ்கலந்திறு
சோணிப்ருஷ்டே லுடந்தி துரிதசய
சமுர் நிர்பரம் பர்த்ஸயந்தீ
பாதோதிம் பூரயந்தி ஸுரநகர ஸரித்
பாவனீந புநாது
- ஆதிசங்கரர் இயற்றிய கங்காஷ்டக ஸ்லோகம்.

பொருள்:


விண்ணுலகிலிருந்து பூமியை நோக்கி பிரவாகிக்கும் தெய்வீக கங்கையின் வேகம் இந்த பிரபஞ்சத்தையே அதிர வைப்பது. தெய்வீகமான ஆகாய கங்கைதான் ஆனாலும் அவள் பிரவாகம் இந்த அண்டத்தை அஞ்ச வைக்கிறது. இத்தனைக்கும் சிவபெருமான், தன் செஞ்சடையை அசைத்து சிதறவிட்ட துளிகள்தான் இந்த கங்கை. இவள், பொன்மயமான மலைக்குகைகளிலும், முகடுகளிலும் ஓடி, காடுகளைப் புனிதமாக்கி பிரவாகிக்கிறாள்.

சமவெளியில் தன் விருப்பம்போல் பாய்ந்து வருகின்றாள். தடைகளைத் தகர்த்தெறிகிறாள். பாவங்களையும் துன் பங்களையும்
விரட்டுகிறாள்.

தீபாவளி நாளன்று இந்த கங்காஷ்டக துதியைப் பாராயணம் செய்தால், நம்மைப் பீடித்திருந்த பாவங்களும், நம் வெற்றிக்குக் குறுக்கே நிற்கும் தடைகளும் உடனே விலகிப் போகும்.
 
 
source http://www.dinakaran.com