கோளறு திருப்பதிகப்பாடல்

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே
என்ற திருஞானசம்பந்தர் பாடலை தினமும் சொல்லி வந்தால் நவ கிரஹங்களினால் நமக்கு ஏற்படும் பிரச்சினைகள் தீரும். தினமும் நாம் வெளியே கிளம்பும் போது இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு கிளம்பினால் பத்திரமாக வீடு வந்து சேரலாம்.


source    http://hindusamayam.forumta.net/-f3/-1-t177.htm