பெண்களை கவர்ந்திழுத்த சிகப்பு சட்டை


     மலர்க்கொத்துக்கள் , மெழுகுவர்த்தி ஒளி இரவு உணவு , கணக்கிலடங்கா பரிசுப்பொருட்கள் எல்லாம் இனி தேவையில்லை. பெண்களின் இதயத்தில் இடம் பிடிக்க சுலபமான வழி சிகப்பு சட்டை அணிவது தான் என்கிறது புதிய ஆராய்ச்சி. கடுஞ்சிவப்பு நிறத்தில் சட்டையோ அல்லது கழுத்துக்கச்சையோ அணியும் பையன்களே பெண்களால் அதிகமாக விரும்பபடுகிறான் என்கிறது இந்த ஆராய்ச்சி.

 இதற்காக பல நாடுகளிலும் உள்ள பெண்களிடம் வெவ்வேறு நிற சட்டைகளை அணிந்தவர்களை கான்பித்து சோதனை செய்ததில் அநேகமாக அணைத்து பெண்களும் சிகப்பு சட்டைக்காரனையே தேர்ந்தெடுத்தது தெரிய வந்தது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இதற்கான ஒப்பீட்டுப் படங்களையும் வெளியிட்டுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்மன உறுதி கொண்ட ஆண்களையே பெண்கள் விரும்புவதாகவும் சிகப்பு வண்ணம் அதை பிரதிபலிப்பதால் பெண்கள் சிகப்பு சட்டைக்காரர்களால் எளிதில் கவர்ந்திழுக்கப்படுகிறார்கள் என்கிறார் மருத்துவர் ஒருவர். எது எப்படியோ ஆண்கள் இனி பெண்களுக்காக வீண் செலவுகள் செய்ய வேண்டியதில்லை. தினமும் சிகப்பு சட்டை அணிந்தால் போதும்.