மொட்டைத் தலை ரோபோ

  ரோபோக்களை உருவாக்குவதிலும் வடிவமைப்பதிலும் ஜப்பானியர்கள் கெட்டிக்காரர்கள். அந்த வகையில் ஹிரோஷி இஷிகுரோ என்ற ஜப்பானியரின் புதிய மிகவும் வித்தியாசமான உருவாக்கம் தான் டெலநாய்டு ஆர் 1. தூரத்தில் இருக்கும் மனிதர்களைக் கூட அருகில் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குமாம் இந்த ரோபோ டெலநாய்டு ஆர் 1 ரோபோக்களை கண்டுபிடிப்பதில் மிகவும் ஆர்வமுடையவரான ஹிரோஷி இஷிகுரோ இதற்கு முன்பு முழு மனித ரோபோ உருவாக்க வேண்டுமென்ற ஆசையில் தன்னை போன்ற தன்மைகளுடன் ஜெமிநோயிட் எச்.ஐ-1 என்ற ரோபோவை உருவாக்கினார்.
பின்னர் அதே போன்று ஜெமிநோயிட் எப் என்ற ஒரு பெண் ரோபோவையும் கண்டுபிடித்தார். தற்போது நீண்ட நாட்கள் முயற்சிக்குப் பின் டெலநாய்டு ஆர் 1 என்ற ரோபோவை உருவாக்கியுள்ளார். பல வித்தியாசமான வயது தோற்றத்திலும் டெலநாய்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதை எங்கு வேண்டுமானாலும் எளிதில் தூக்கிச் செல்லலாம். இவை தான் டெலநாய்டின் சிறப்பம்சங்கள். 


  டெலநாய்டு ஆர் 1 ஒரு தொலைதொடர்பு சாதனம் போன்றது. இரண்டு பேர் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள விரும்பினாலோ அல்லது அரட்டை அடிக்கும் போதோ தூரத்தில் உள்ளபவர்கள் பேசுவதை உள்வாங்கி மற்றோவரிடம் அருகில் இருந்து கொண்டு பேசுவதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்துமாறு இதை வடிவமைத்துள்ளார். இந்த ரோபோவை செயல்பட வைக்க வெப் கேமராவுடன் ஒருவர் கணினியின் முன் உட்கார வேண்டும்.


அப்போது இந்த ரோபோ கணினியில் உள்ளவரின் அசைவுகளையும் அவர் குரலையும் பதிவு செய்து கொள்ளும். பின்னர் அதனுடன் பேசும் போது கணினியில் உள்ளவர் போன்ற குரலிலும் அவர் பதில் கூறுவது போன்றே ரோபோவும் பதிலளிக்கும். இன்னும் சில மாதங்களில் 5000 பவுண்டுகளுக்கு விற்பனைக்கு தயாராகி வருகிறது டெலநாய்டு ஆர் 1 .