நுரையீரலை வெட்டி எடுத்துத் தின்ற சிறைக்கைதி

                        நுரையீரலை வெட்டி எடுத்துத் தின்ற சிறைக்கைதி
  

இவர் ஒரு சிறைக்கைதி.

இந்தச் சம்பவம் 2007 ஆம் ஆண்டு, பிரான்சைச் சேர்ந்த ரூன் நகரில் நிகழ்ந்துள்ளது.

சிறைச்சலையில் தன்னுடன் இருந்த தியறி பவுட்ரி என்பவரைக் கொன்று, அவரது நுரையீரலை இவர் தின்றுள்ளார். அதிலும் இவர் ஒரு தவறை இழைத்து விட்டார். அது என்ன தெரியுமா?

பவுட்ரியின் இதயம் என நினைத்து அவரது நுரையீரலை இவர் தவறாக வெட்டி எடுத்து உண்டிருக்கின்றார்.

நிக்கலஸ் கோகெய்ன் (39) என்பவரே இவ்வாறான ஒரு வெறிச்செயலைப் புரிந்துள்ளார்.

பவுட்ரியை அடித்து, உதைத்து, கத்திரிக்கோலால் குத்தி இவர் கொலை செய்துள்ளார். பின்னர் சவரக்கத்தியைக் கொண்டு நெஞ்சுப் பகுதியை வெட்டிய இவர் இதயம் என நினைத்து, நுரையீரலை எடுத்துத் தின்றுள்ளார்.

ஏனைய சில உறுப்புக்களை சிறையினுள்ளேயே பொறித்து, வெங்காயத்துண்டுகளுடன் இவர் தின்றிருக்கின்றார்.

இவரை விசாரணைக்குட்படுத்திய சமயம், "அவரது ஆன்மாவை எடுப்பதே எனது நோக்கம்" என இவர் தெரிவித்திருக்கின்றார் என்றால் இவரது வெறி எத்தகையதாக இருந்திருக்கும்?

ஆயுதக் கொள்ளை சம்பந்தமாக சிறைச்சாலையில் வைக்கப்படிருக்கும் இவர், எதிர்வரும் வியாழக்கிழமை தண்டனையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்.