பவுர்ணமி நாட்களில் சுறா மீன்களுக்கு கோபம் அதிகம்

                  பவுர்ணமி நாட்களில் சுறா மீன்களுக்கு கோபம் அதிகம்!!

   அமெரிக்காவில் புளோரிடாவில் வலூசியா கவுண்டி என்ற இடத்தில் உள்ள கடலில் சுறா மீன்கள் அதிக அளவில் உள்ளன. இங்கு கடலில் குளிப்பவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் சுறா மீன்களால் தாக்கப்படுகின்றனர். எனவே, இந்த இடத்தை உலகின் “சுறா தாக்கும் தலைநகர்” என்று அழைக்கின்றனர். ஆகவே சுறா மீன்கள் தாக்குதல் குறித்து புளோரிடா பல்கலைக் கழகத்தை சேர்ந்த  ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர்

 
அப்போது வலூசியா கவுண்டி நகரில் கடந்த 50 ஆண்டுகளில் சுறா மீன்களின் தாக்குதலில் சிக்கியவர்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டன. அப்போது சுறா மீன்கள் பவுணர்மி நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடலில் குளிப்பவர்களை தாக்குவது தெரியவந்தது.
 
மேலும் கடலில் கறுப்பு மற்றும் வெள்ளை நிற நீச்சல் உடைகளை அணிந்து குளிப்பவர்களை தாக்குகிறது. குறிப்பாக ஆகஸ்டு மாதத்தில்தான் இச்சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுகிறது. இவை ஆய்வில் தெரிய வந்துள்ளது.
 
மேலும் பவுர்ணமி நேரத்தின்போது சுறா மீன்கள் இனப்பெருக்கத்தில் ஈடுபடும். அப்போது அவற்றுக்கு கடலில் குளிப்பவர்களால் இடையூறு ஏற்படுவதால் அவை தாக்குவதாக ஆராய்ச்சியாளர் ஜார்ஜ்பர்கவ் தெரிவித்துள்ளார்.