இனவாதமும், இனப் படுகொலைகளும்:


close guantanamoஇந்தியாவில் இந்த மனித உரிமையாளர்கள் அடிக்கும் கொட்டங்களை எழுதி மாளாது. அதனால் அதை விட்டுவிட்டு இந்த நூற்றாண்டில் நடந்த அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குதலையும் அதைத் தொடர்ந்து இவர்கள் அடித்த கூத்துகளையும் நோக்கலாம். செப்டம்பர் 11, 2001 தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்கா இத்தாக்குதலில் தொடர்பு உடையவர்களையும் மற்றும் பல இஸ்லாமியத் தீவிரவாதிகளையும் “க்வொண்டனமா பே” என்னும் இடத்தில் சிறை வைத்தது. இத்தாக்குதலுக்கு சூத்ரதானியான “கலீத் ஷேய்க் முகமது” என்பவரும் இதில் அடக்கம். ஜார்ஷ் புஷ்ஷை அரக்கனாகவும், ஒபாமாவை அமைதிக் காவலனாகவும் உருவகப்படுத்தியும் மனித உரிமையாளர்களின் வெறி அடங்கவில்லை. கம்யூனிஸத்தை அனுசரிக்க மனிதர்கள் இருக்கும்வரை உலகில் கிறுக்கர்களும், வெறி பிடித்தவர்களும் இருந்தே தீருவார்கள். ஒடுக்கப்பட்ட இனங்களுக்காகக் குரல் கொடுக்கிறோம் என்னும் பெயரில் தீவிரவாத்திற்கு நெய் ஊற்றுவதுதானே கம்யூனிஸ்டுகளின் வேலை. இந்த வேலையை மனித உரிமையாளர்களும் செவ்வனே செய்து வருகிறார்கள். அமெரிக்காவில் கலீத் ஷேய்க் முகமது, இந்தியாவில் அப்சல் குரு போன்றோருக்கு ஆதரவாக செயல்படுவதுதானே இவர்கள் வேலை. செப்டம்பர் 11 தாக்குதலில் இறந்த 3000 அப்பாவிகளும் மனிதர்களே அல்ல. அப்பாவிகளைக் கொன்ற “கலீத் ஷேய்க் முகமது” மற்றும் அவருடைய கூட்டாளிகளும்தானே மனிதர்கள். அந்த மனித உரிமையாளர்களின் கூற்றுப்படி இந்த மனிதர்கள் நியாயமாக நடத்தப்பட வேண்டுமாம். அவர்கள் துன்புறுத்தப்படக் கூடாதாம்.
[இங்கு ஒரு இடைச்செருகல் செய்தி. துக்ளக் ஆசிரியர் சோ ஒருமுறை எழுதியது. நம் வீட்டில் கொள்ளை நடக்கிறது என்று நினைத்துக்கொள்ளுங்கள். சில நாட்களுக்குப் பிறகு போலீஸ் அந்தக் கொள்ளைக்காரனை பிடித்து விடுகிறது என்றும் வைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுது நாம் போலீஸிடம் சென்று அந்த கொள்ளைக்காரனை நல்ல முறையில் நடத்துங்கள் என்றா கூறுவோம். அக்கொள்ளையனை என்ன வேண்டுமானாலும் செய்து என்னிடமிருந்து திருடிய பொருட்களை வாங்கிக் கொடுங்கள் என்றுதானே கூறுவோம். ஒரு திருடனையே நாம் இப்படி நடத்தும்பொழுது 3000 அப்பாவிகளைக் கொன்ற கலீத் ஷேய்க் முகமது போன்ற மிருகங்களை துன்புறுத்தி அவர்களின் அடுத்த கட்ட தாக்குதலைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் மூன்று வேளையும் மூக்குப் பிடிக்க உணவா கொடுப்பது?]
இதுபோன்ற மனித உரிமையாளர்களின் பிடியில் சிக்கிய ஒபாமா, தான் அதிபராக தேர்தலில் வெற்றி பெற்றால் இந்த “க்வொண்டனமா பே” சிறையை மூடி விடுவதாக வாக்குறுதி அளித்தார்.
Closing Guantanomo: “On my first day in office, I prohibited — without exception or equivocation — the use of torture by the United States of America. I ordered the prison at Guantanamo Bay closed, and we are doing the hard work of forging a framework to combat extremism within the rule of law.” — Barack Obama.
ஒபாமாவிற்கு பதவி ஏற்றபிறகுதான் புரிந்தது, அச்சிறையை மூடுவது எளிதல்ல என்பது. அங்கு கிட்டத்தட்ட 200 முஸ்லீம் தீவிரவாதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறையை மூடியபிறகு அத்தீவிரவாதிகளை என்ன செய்வது என்ற கேள்விக்கு விடை அறியாமல் உணர்ச்சிவசத்தில் உளறியதால் ஏற்பட்ட விளைவு இது.


கடைசியாக விருதும் விழுந்தது
உலகில் என்றுமே புனிதத்திற்கும், உண்மைக்கும், நியாயத்திற்கும் தனி இடம் இருந்தே தீரும். உத்தம மனிதர்கள் உலகில் உள்ளார்கள் என்று அறைகூவ “நோபல் அமைதிப் பரிசு” என்றொரு விருது வழங்கப்பட்டு வந்தது. நாடுகளுக்கு இடையே ஒற்றுமையை வளர்ப்பவர்களுக்கும், தன்னுடைய அல்லது மற்றொரு நாட்டின் சேனையின் அளவை குறைப்பவர்களுக்கும், உலக அமைதிக்காக மாநாடுகள் போன்றவைகளை நடத்துபவர்களுக்கும் இந்த “நோபல் அமைதிப் பரிசு” வழங்கப்பட வேண்டும் என்பது இவ்விருதை உருவாக்கிய “ஆல்பிரட் நோபல்” என்பவரின் அவா. நோபல் தன் முழு சொத்துகளையும் இந்த விருதுகள் உருவாக்கப்பட வழங்கினார். அறிவியல், இலக்கியம் போன்ற துறைகளில் சிறந்தவர்களுக்கும் இவ்விருது வழங்கப்பட்டாலும் “நோபல் அமைதி விருது” மிகவும் கௌரவமாக கருதப்பட்டு வந்தது.
obama-gets-peace-prize-cartoon-by-zapiroஇந்த ஆண்டு இவ்விருதை வழங்க முடிவெடுக்கும் மனிதர்களுக்கும் மற்றவர்களைப் போன்றே இனவாதம், சிறுபான்மைப் பேய் போன்றவை பிடித்துக்கொண்டது. பதவியேற்று 9 மாதமே ஆகியுள்ளவரும் உலகில் நடந்துவரும் எந்தப் பெரிய மோதலையும் தீர்க்காதவரும் மட்டுமல்ல அவற்றைத் தீர்க்க எந்த கொள்கை மாற்றத்தையும் ஏற்படுத்தாதவருமான அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

இன ஒற்றுமைக்கான ஒரே வழி: [பெண் கொடுத்து பெண் எடுப்பது]
mixed-marriageஇக்காலத் தலைவர்கள், புத்திஜீவிகள் மற்றும் ஊடகங்கள் கூறும் வகையில் இன ஒற்றுமை உலகில் ஏற்பட ஒரே ஒரு வழிதான் உள்ளது. கோயம்புத்தூரில் உள்ள ஒரு கவுண்டர் தன் பெண்ணை காரைக்குடியில் உள்ள ஒரு செட்டியாரின் பையனுக்கு மனமுவந்து திருமணம் செய்விக்கத் தயாராக வேண்டும். (அது என்ன, பிராமணர்களை மட்டும்தான் உதாரணம் காட்ட வேண்டுமா?) காதலித்து பெற்றோருக்குத் தெரியாமல் செய்யப்படும் திருமணத்தைப் பற்றி இங்கு பேசவில்லை. இந்தியாவில் உள்ள எல்லா ஜாதியைச் சேர்ந்த பெற்றோரும் மனமுவந்து தங்கள் மகனையோ, மகளையோ வேற்று ஜாதியைச் சேர்ந்தவருக்குத் திருமணம் செய்விக்க வேண்டும். ஐரோப்பாவில் என்றால் தன் வெள்ளை மகனுக்கு ஆசியப் பெண்ணைத் திருமணம் செய்விக்க வேண்டும். இது இன்னும் பல தலைமுறைகளுக்கு கற்பனையாகவே இருக்கப்போவதால் நாம் அடுத்த விஷயத்திற்குச் செல்வோம்.

இன ஒற்றுமைக்கான நாம் கூறும் விளக்கம்
வேற்றுமையில் ஒற்றுமை

எல்லா இனத்தாரும் தங்கள் தங்கள் பிரதேசங்களில் அவரவர்கள் விருப்பத்திற்கேற்ப தங்களின் மூதாதையர்களின் பாரம்பரிய முறையிலும் தங்களின் கலாசாரக் குறியீடுகளைப் பேணி பாதுகாத்துக்கொண்டும் வாழ்வதே நடைமுறைக்கு சாத்தியமானதும் மனித சமுதாயம் அமைதியாக வாழ்வதற்குண்டானதுமான வழி.

நமக்கிருக்கும் வழிகள்
இது வரையில் மேற்கத்திய நாடுகளின் சமுதாயத்தின் பல மட்டங்களில் குடியேறிகளால் ஏற்படும் அபத்தங்களைக் கண்டோம். “இன ஒற்றுமை” ஆதரவாளர்களால் கூறப்படும் “Cosmopolitan Culture” பெரும்பான்மை சமுதாயங்களிடையே வெறுப்பையே ஏற்படுத்தி உள்ளது. மேற்கத்திய சமுதாயங்கள் இன வேற்றுமை என்ற நிலையிலிருந்து “இன துவேஷம்” என்ற நிலைக்கு வந்தாகி விட்டது. நடைமுறை யதார்த்தத்தை ஒப்புக்கொண்டு வரும்காலங்களில் இரத்தக் களரியைத் தடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
இது நாமே உருவாக்கிக்கொண்ட புற்றுநோய். சாதாரண மருந்து மற்றும் ஊசிகளால் புற்றுநோயை குணப்படுத்த முடியாது. Chemotherapy எனப்படும் மிக வீரியமான மருந்துகளைக் கொடுக்க வேண்டியிருக்கும். Immigration Freeze– இதனால் சில பக்க விளைவுகள் ஏற்பட்டே தீரும். உயிரைக் காப்பாற்ற இந்த வலியைச் சகித்துக்கொள்ளத்தான் வேண்டும். சில நேரங்களில் Surgery ,அறுவை சிகிச்சையும் செய்ய நேரிடும்– விருப்பப்பட்டவர்களை மீண்டும் அவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்ப வேண்டி வரும்.
மேற்கத்திய நாடுகளின் குடியேறிகளால் கடந்த 20, 30 வருடங்களில் அந்நாடுகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் வெள்ளையர்களால் ஜீரணிக்க முடியாத அளவு மாறியிருக்கிறது. இவை உள்காயங்களைப் போல் அவர்களுக்கு தொடர்ந்து வலியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. செப்டம்பர் 11, 2001 தாக்குதலைப் போன்ற இன்னொரு தாக்குதல் ஏற்படும்போதோ அல்லது வேறுவகையில் ஏற்படும்போதோ வெள்ளையர்களின் கோபம் வன்முறையாக மாறலாம். முதலுதவியைப் போன்று அவர்களுக்கு இன்று சில மருந்துகள் தேவைப்படுகின்றன.
(1) முதலாவதாக மற்ற நாடுகளில் இருந்து வருவோருக்கு (வெள்ளையர்கள் மற்றும் யூதர்கள் தவிர) புதியதாக குடியுரிமை கொடுக்கப்படக்கூடாது. மற்ற நாட்டின் வெள்ளையர்கள் மற்றும் யூதர்களும் இதற்கு விதிவிலக்காகவே இருப்பார்கள். உதாரணமாக ஐரோப்பிய நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கோ, ஆஸ்திரேலியாவிலிருந்து ஐரோப்பாவிற்கோ குடியேறும் வழி அவர்களுக்கு இருக்கும். அவர்களுக்குள் சிற்சில வேறுபாடுகள் இருப்பினும் இரண்டு முக்கிய ஒற்றுமைகள் உள்ளன. வெள்ளை நிறம் ஒன்று. அதைவிட முக்கியமானது மதம் என்னும் ஒற்றுமை. இரண்டாவதாக யூதர்கள். இந்த விஷயத்தைப் புரிந்துகொள்ள அவர்களின் பைபிளின் கடைசி புத்தகமான “Revelation”க்கு செல்ல வேண்டும். அப்புத்தகத்தின்படி இயேசு கிறிஸ்து மறுபடியும் இவ்வுலகில் உயிர்த்தெழ யூதர்களுக்கு கடவுளாலேயே வழங்கப்பட்ட பூமி இருந்தாக வேண்டும். 1948ல் பிரிட்டனின் காலனியாக இருந்த இஸ்ரேலில் வெறும் 25 சதவிகித யூதர்களே வாழ்ந்து வந்தார்கள். மற்றவர்கள் பாலஸ்தினீய முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும். இந்தப் புத்தகத்தின் அடிப்படையிலேயே சிறுபான்மையாக இருந்த யூதர்களுக்கு தனி நாட்டை பிரிட்டன் வழங்கியது என்று கூறுவார்கள். இவ்விஷயங்கள் பலருக்கு கோபத்தையே ஏற்படுத்தும். ஆனால் வெள்ளையர்களோடு யூதர்கள் சில சமாதானங்களை செய்துகொண்டு சேர்ந்து வாழமுடியும். இந்துக்களாலும், முஸ்லீம்களாலும், ஆப்பிரிக்கக் கருப்பர்களாலும் வெள்ளையர்களோடு சேர்ந்து வாழ முடியவில்லை என்பதே நிதர்சன உண்மை. இந்த இன ஒற்றுமை, வரும் காலங்களில் ஏற்படுமா என்றால் தெரியவில்லை என்றுதான் கூற வேண்டும். இன்றுள்ள யதார்த்தத்தை நோக்கும்போது இவ்வினங்கள், ஒரே பிரதேசத்தில் ஒன்றாக வசிக்கும்போது, வரும் காலங்களில் தோன்றக்கூடும் என்கிற இன ஒற்றுமையைவிட இன்னும் சில காலத்தில் ஏற்படப்போகும் இரத்தக் களரியே நம்மை அச்சுறுத்துகிறது.
work-permit(2) இங்கே இன்னொரு யதார்த்தத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். மேற்கத்திய நாடுகளில் அவர்களின் தொழிற்துறை வேலைகளுக்கு ஆட்களின் தட்டுப்பாடு ஏற்படுவதால் அதை நிரப்ப அந்நியர்கள் அங்கு செல்லத்தான் வேண்டி வரும். “Work Permit” (வேலைக்கான அனுமதி) எவருக்கும் எக்காலத்திலும் “Citizenship” குடியுரிமையாக மாறக்கூடாது. அந்நியர்கள் மேற்கத்திய நாடுகளுக்குச் செல்வது பணம் சம்பாதிக்க மட்டுமே என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. உதாரணமாக ஆப்பிரிக்க சோமாலியாவில் ஒரு நாளைக்கு அரை டாலருக்கும் கீழே சம்பாதிப்பவருக்கு அமெரிக்காவில் கூலி வேலைக்கும் ஒரு நாளைக்கு 50 டாலர் கிடைக்கிறது. இதில் ஈடுபடும் இருவருக்குமே லாபம்தான். அமெரிக்காவிற்கும் ஆட்கள் கிடைக்கிறார்கள். சோமாலியராலும் தன் குடும்பத்தை வறுமையின் கொடுமையிலிருந்து மீட்க முடிகிறது. இந்த வியாபாரத்தில் குடியுரிமையை நாம் ஏன் இழுக்க வேண்டும்?
(3) மூன்றாவதாக ஒரு நாட்டின் அடக்குமுறையிலிருந்து தப்பிக்க ஒரு இனத்து அல்லது குழுவின் மக்கள் மேற்கத்திய நாடுகளுக்கு அகதிகளாகச் சென்று பிறகு குடியுரிமை பெறுகிறார்கள். இவர்களுக்கு தற்காலிகக் குடியுரிமை கொடுக்கப்படலாம். இதுவும் அவர்கள் உண்மையான அகதிகள் என்பது உறுதி செய்யப்பட்ட பின்புதான் அளிக்கப்பட வேண்டும். உதாரணமாக இலங்கைத் தமிழர்கள் உள்நாட்டுப் போரிலிருந்து தப்பிக்க பல மேற்கத்திய நாடுகளுக்குச் சென்று குடியுரிமை பெற்றிருக்கிறார்கள். வரும்காலங்களில் இது போன்ற சமயங்களில் தற்காலிகக் குடியுரிமை கொடுக்கப்படலாம். அவர்களின் சொந்த நாட்டில் நிலைமை சீரடையும் பட்சத்தில் அவர்கள் திருப்பி அனுப்பப்பட வேண்டும்.
இது போன்ற நிலை வரும்காலங்களில் ஏற்பட்டாலும் பல்வேறு இன மக்கள் மேற்கத்திய நாடுகளில் வாழ வேண்டி வரலாம். அந்நியர்கள் மேற்கத்திய நாடுகளில் சென்று வாழும்பொழுது எப்படி நடந்து கொள்ள வேண்டும்? ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளைப் பற்றி துக்ளக்கில் சோ எழுதியதைப் பார்க்கலாம். “ஆஸ்திரேலியாவில் மட்டுமல்லாமல் எந்த நாட்டிற்குச் சென்றாலும் இந்திய மாணவர்கள் அடக்கத்தோடு வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். சங்கம் அமைத்து கோஷங்கள் போடுவது, தெருவில் இறங்கிப் போராட்டம் செய்வது போன்றவற்றால் அந்நாட்டுப் பெரும்பான்மை சமூக மக்களின் வெறுப்புக்குத்தான் ஆளாக வேண்டும்.”
இந்த அறிவுரை இந்திய மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து அந்நியர்களுக்கும் பொருந்தும். உலக அளவில் வலது சாரி சக்திகள் ஒன்றிணைவது ஒன்றே வழி
குடியேறிகளின் பிரச்சினை ஒருபுறம் இருக்க அதைப் போலவே இன ரீதியில் மிக முக்கியமான இன்னொரு பிரச்சினையையும் நாம் சந்தித்து கொண்டிருக்கிறோம்.
taliban-fightersஇந்து, கிறிஸ்தவ மற்றும் யூத இனங்களை வேரறுக்க ஒரு அரக்கன் உருவாகியிருக்கிறான். அந்த அரக்கனின் பெயர்தான் தாலிபான். (இக்கட்டுரையின் வசதிக்காக இஸ்லாமியத் தீவிரவாதிகள் அனைவரையும் தாலிபான் என்றே கூறுகிறேன்.ஆப்கானிஸ்தானில் அல்-கொய்தா என்றும் இந்தியாவில் லஷ்கர்-எ-தொய்பா, ஜெய்ஷ்-எ-முகமது என்றும் இஸ்ரேலில் ஹமாஸ், ஹிஸ்பொல்லா என்றும் இவர்கள் அழைக்கப்பட்டாலும் இவர்களின் நோக்கம் ஒன்றுதான்.) யூதர்களால் தாலிபான்களை கட்டுக்குள் வைக்க முடிகிறதே தவிர அழிக்க முடியவில்லை. இந்தியாவிலும் கிட்டத்தட்ட இதே நிலைமைதான். அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கோ ஆப்கானிஸ்தானில் மண்ணைக் கவ்வ வேண்டிய நிலை. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தோற்றால் உடனடியாக நடுங்க வேண்டிய நாடு அமெரிக்காவோ அல்லது அதன் கூட்டாளிகளோ அல்ல, இந்தியாதான். தாலிபான்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து நம் குல வைரி நாடான பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்து விடுவர். மேற்கூறிய தகவல்களிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது இதுதான்– தாலிபான்’களை நம் மூன்று இனங்களாலும் தனித்தனியாக அழிக்க முடியாது என்பதுதான். காலத்தின் கட்டாயத்திற்காகவாவது இந்த மூன்று இனங்களும் சேர வேண்டியதுதான்.சரி, ஆனால் நம் மூவருக்குள்ளும் உள்ள பிணக்குகளை மறந்து நம்மால் இணைய முடியுமா? சற்று சிந்திப்போம்.

கிறிஸ்தவர்களும் யூதர்களும்
முன்னரே கூறிய படி அவர்களுக்கு மதத்தின் அடிப்படையில் வேற்றுமையும் உள்ளது, ஒற்றுமையும் உள்ளது. யூதர்களே இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்தார்கள் என்பது கிறிஸ்தவர்களின் வாதம். அதே சமயத்தில் யூதர்களுக்கு தனிநாடு வேண்டும் என்று கூறுவதும் பைபிள்தான் என்பதால் அவர்களுக்குள்ள வேற்றுமையை விட ஒற்றுமை அதிகம்தான்.1948லிருந்து இஸ்ரேலின் சரித்திரத்தைப் பாருங்கள்; யூதர்களுக்காக மேற்கத்திய நாடுகள் பட்ட சிரமங்கள் அவர்களுக்கு இடையே உள்ள பிரிக்க முடியாத ஒற்றுமையை விளக்கும். நேபாளத்தை நாம் கைகழுவி விட்டதால் சீனக் கூலிப்படையான மாவோயிஸ்டுகள் வசம் அந்நாடு போனதையும் பாருங்கள். மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலைக் கைகழுவி விடும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

யூதர்களும் இந்துக்களும்
நம்மிரு இனங்களுக்கும் வரலாற்று ரீதியாகக் கூட எந்த ஒரு சுணக்கமும் இருந்ததில்லை. யூதர்களில் ஒரு சிலர் பல தலைமுறைகளாக இந்தியாவின் கேரளாவில் வாழ்ந்து வருவதையும் இங்கு நோக்கலாம். இஸ்ரேலுடன் நாம் இராஜ்ஜீயத் தொடர்புகளை ஆரம்பித்தவுடன் அந்நாட்டின் பிரதமர் இந்தியாவிற்கு வருகை தந்தார். அவர் நம்முடைய ஜனாதிபதியைச் சந்தித்தவுடன் சமஸ்கிருதத்திலேயே முதல் வார்த்தையைக் கூறினார். நம் இரு நாட்டு மக்களும் பண்டைய கலாசாரத்தை பின்பற்றுபவர்கள். ஆகவே நம்முடைய கலாசாரத்தின் ஆணிவேரான சமஸ்கிருத்தில் பேசுவது மிகவும் முக்கியம் என்று கருதினார். மேலும் காஷ்மீர் பிரச்சினை தீர தம் நாடு, இந்திய-பாகிஸ்தான் எல்லை முழுவதும் “Computerised Sensors”ஐ அமைத்துத் தருவதாக உறுதி அளித்தார். நாம் யூதர்களை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் அவர்கள் நம்மை நோக்கி பல அடிகள் முன்னோக்கி வருவர். அவர்கள் நம்மையும் நம் மதத்தையும் மதிப்பவர்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

இந்துக்களும் கிறிஸ்தவர்களும்
conversionagenda2இங்கு ஒன்றை கூறித்தான் ஆக வேண்டும். நமக்கும் கிறிஸ்தவர்களுக்கும் உள்ள பிணக்குகள் சில வருடங்களில் கூட தீரும் என்று கூற முடியாது. 200 வருடங்களாக நம் நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள். அவர்கள் புரிந்த கொடுமைகளின் வடுவே இன்னும் மறையவில்லை. சமஸ்கிருதத்தை பார்ப்பனர்களின் மொழி என்றும் பார்ப்பனர்கள் இந்தியாவிற்குள் நுழைந்து குடியேறிய ஆரியர்கள் என்றும் புரளி மூட்டையை அவிழ்த்து விட்டார்கள். இதனுடைய தாக்கத்திலிருந்தே நம்மால் இன்னும் வெளிவர முடியவில்லை. ஆனால் இன்றுள்ள யதார்த்த நிலையில் நம்மால் கடந்த காலத்தை மறக்கவோ மன்னிக்கவோ இயலவில்லையென்றாலும் இனி வரும்காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கடந்த காலத்தையாவது நாம் வாதத்திலிருந்து நீக்கினாலும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத பிரச்சினையாக இருப்பது மதமாற்றமே. உணர்ச்சி வசப்படாமல் யோசித்து பார்த்தால் இந்த மதமாற்றத்திற்கு ஆதாரமாக இருப்பது பணம்தான் என்பது புரியும். அதாவது மேற்கத்திய நாடுகளிலிருந்து நம் நாட்டின் மிஷனரிகளுக்கு அனுப்பப்படும் பணமே இந்த மதமாற்றம் என்னும் பேய்க்கு உயிராக இருக்கிறது. எப்படியேனும் இந்தப் பணப் பட்டுவாடாவை நாம் தடுத்து விட்டால் இங்கிருக்கும் மதமாற்றப் பேய் சில வருடங்கள் துடித்து பின்னர் அடங்கிவிடும். இதை நடைமுறைப்படுத்த நாம் மேற்கத்திய நாடுகளுடன் உணர்வுபூர்வமான ஒத்துழைப்பை நாடவேண்டியதுதான் வழி. அதற்கு நாம் சில விலைகளை கொடுத்துத்தான் தீர வேண்டும். உதாரணமாக ஆப்கானிஸ்தானுக்கு இந்தியத் துருப்புகளை அனுப்புவது, இரான் நாட்டு விஷயத்தில் மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவான நிலையை எடுப்பது, இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பது போன்றவற்றைச் செய்ய நேரிடலாம்.

வலதுசாரிகள் ஒன்றுபடும் விஷயங்கள்
நம் மூன்று இனங்களுக்குள்ளும் பல வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமைக்கான காரணிகளும் உள்ளன. கருக் கலைப்பு, ஓரினச் சேர்க்கை, “Embryonic Stem cells” என்ற மூல உயிரணுவை பிரிப்பதற்காக ஒரு சிசுவை உருவாக்கி அழிப்பது போன்ற விஷயங்களை எதிர்ப்பதில் நம் மூன்று இன வலதுசாரிகளும் ஒன்றுபடுகின்றன.
சரி, மேற்கூறிய விஷயங்கள் இன்றைய நிலையில் சாத்தியமா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும். இதற்கு முக்கியத் தடையாக இருப்பது ஜனநாயகக் கட்சிகள்தான். (ஜனநாயகம் இல்லை). இந்தியாவில் காங்கிரஸ், அமெரிக்காவில் பதவியில் இருக்கும் ஜனநாயக கட்சி, பிரிட்டனில் பதவியில் உள்ள தொழிலாளர் கட்சி போன்றவை எப்பொழுதும் “புனித சிறுபான்மை ஸ்நானம்” செய்வதால் மதமாற்றத்தைப் பற்றியோ, குடியேறிகளால் தோன்றும் பிரச்சினைகளைப் பற்றியோ இவர்களுக்கு அக்கறையில்லை. இவர்களிடம் உள்ள இன்னொரு பிரச்சினை, தங்களை எப்பொழுதும் மதச் சார்பற்றவர்களாகக் காட்டிக்கொள்வது. உலகில் மக்களின் அடையாளமாக இருப்பது மதமே. பெரும்பான்மையினருடைய மதத்துடன் தொடர்பு இல்லாமலும் சிறுபான்மையினர்களின் மதங்களுக்கு ஆதரவாகவும் இருப்பதே மதச்சார்பற்ற நிலை என்பது இவர்களின் புரிதல். இதற்கு எதிரிடையாக மதமே மக்களை ஒன்றிணைக்கும் சக்தி என்றும், மதங்களாலேயே மக்கள் ஒழுக்கத்துடன் வாழ்கிறார்கள் என்றும் மூதாதையர்களின் வாழ்க்கை நம் போன்றோருக்கு பாடம் என்றும் நினைப்பது வலதுசாரிகளின் கொள்கை.

மூன்றாவது முனைத் தாக்குதல்
குடியுரிமை பிரச்சினையும் தாலிபான்’களும் நம்மை இருபுறம் அழுத்த மூன்றாவது முனையில் கம்யூனிசத்தைச் சேராத நாத்திகர்களும், நாத்திகத்தையே கொள்கையாகக்கொண்ட கம்யூனிஸ்டுகளும் நம்மை நெருக்குகிறார்கள். இதை விளக்க ஒரே ஒரு மிக முக்கியமான உதாரணத்தைக் காண்போம்.

சிலுவையே சிலுவையில் அறையப்பட்டது
crucifix-on-a-classroom-wall-in-romeவடக்கு இத்தாலியில் ஒரு பள்ளிக்கூடம். இந்தப் பள்ளியில் படிக்கும் இரு குழந்தைகளின் தாயார் அரசு பள்ளிகளின் வகுப்பறைகளில் சிலுவையின் படம் இருப்பதால் தன் குழந்தைக்கு மதச்சார்பற்ற கல்வி கிடைப்பதில்லை என்றும் அதனால் அவற்றை அகற்ற வேண்டும் என்றும் வாதாடினார். இத்தாலியின் நீதிமன்றத்தில் இவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவுடன் அவர் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்நீதிமன்றத்தில் இவரின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசு பள்ளிகளில் சிலுவையை வைக்கக்கூடாது என்று தீர்ப்பளித்துள்ளனர். சரி, இதோடு நீதிபதிகள் நிற்கவில்லை. தன்னுடைய குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட கல்வியை வழங்குவது என்பதில் பெற்றோர்களுக்கு உரிமை இருக்க வேண்டும் என்றும் கடவுளை நம்புவதா வேண்டாமா என்பதில் குழந்தைகளுக்கு உரிமை இருக்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்துள்ளது. (கத்தோலிக்கப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தங்கள் நாட்டில் தங்கள் மத அடையாளங்கள் உள்ள பள்ளிகளில் கல்வி அளிக்க உரிமை கிடையாதா?)
இத்தோடும் நீதிபதிகள் நிற்கவில்லை. இது போன்ற மத அடையாளங்கள் பள்ளிகளில் வைக்கப்பட்டால் மற்ற மதங்களைச் சார்ந்த குழந்தைகளுக்கு (அதாவது சிறுபான்மை மக்களின் குழந்தைகளுக்கு) தொந்தரவாக இருக்குமாம்.
இத்தோடு இந்த விஷயம் முடியும் என்று நினைக்காதீர்கள். இத்தீர்ப்பை ஆராய்ந்த வல்லுநர்கள் இனி அரசுக் கட்டிடங்கள், அரசு அலுவலகங்கள் போன்ற அனைத்து அரசுச் சார்புடைய இடங்களிலும் சிலுவையை வைக்கமுடியாது என்ற நிலை தோன்றப் போகிறது என்றார்கள். மேலும் இது ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பானபடியால் இத்தீர்ப்பு எல்லா ஐரோப்பிய ஒன்றிய நாடுகளையும் கட்டுப்படுத்தும். கிட்டத்தட்ட 1500 ஆண்டுகளாக வெள்ளையர்கள் பரிபாலித்து வரும் கலாசாரச் சின்னங்களை குடியேறிகளும், நாத்திகர்களும் சிறிது சிறிதாக அழிப்பதை இதை விடத் தெளிவாக நாம் புரிந்துகொள்ள முடியாது.
நம்மூரில் அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடக் கூடாது என்று திராவிடக் கட்சிகள் கூறி வருவதையும் நாம் இங்கு நோக்கலாம்.

முடிவுரை
சமஸ்கிருதத்தில் ஒரு விஷயத்தை பாகுபடுத்திப் பார்க்க “உத்தம, மத்யம மற்றும் அதம” என்ற சொற்களை உபயோகிப்பார்கள். உதாரணமாக மனிதனை பொருளாதார அளவில் “பணக்காரன், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஏழை” என்று பிரிக்கலாம். உலகம் தோன்றிய நாள் முதல் இந்தப் பொருளாதார ஏற்ற தாழ்வுகள் இருந்தே வந்திருக்கிறது. கடந்த 150 வருடங்களாக இந்த ஏற்ற தாழ்வுகளை ஒழிக்க முனைந்த பொதுவுடைமைக் கொள்கைகளான கம்யூனிசம் மற்றும் சோஷலிஸம் போன்றவை ஒழிந்திருக்கிறதே தவிர பொருளாதார ஏற்ற தாழ்வுகள் ஒழிந்தபாடில்லை. இதைப் போலவே மனிதனை புத்திகூர்மை அடிப்படையில், “புத்திசாலி, சுமாரான அறிவாளி மற்றும் முட்டாள்” என்று பிரிக்கிறார்கள். இதுபோன்ற இயற்கையான பாகுபாடுகள் சில நேரங்களில் தவறாகத் தென்பட்டாலும் இந்த ஏற்ற தாழ்வுகள் உலகம் உள்ள வரையில் இருக்கத்தான் போகிறது. (இல்லாவிட்டால் மனித குலத்தின் இயக்கம் இவ்வளவு வேகத்தோடும் சுவாரசியங்களோடும் இல்லாமலும் போகலாம்.)
இதைப் போன்றே நாகரிகம் முதிர்ந்த நிலையிலும் மனிதன் தனக்குள்ளே பல பிரிவுகளை அமைத்துக் கொண்டிருக்கிறான். இதில் மத ரீதியான பிரிவு மிகவும் முக்கியமானது. இது சரியா, தவறா அல்லது இந்தப் பிரிவுகள் சில நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இருக்குமா, இருக்காதா என்பதையெல்லாம் காலம்தான் முடிவெடுக்கும்.
இன்றுள்ள மனிதனின் நாகரிக முதிர்ச்சியைக் கணக்கில் கொண்டு, இனப் படுகொலைகளை ஏற்பட விடாமல் செய்வது நமக்குள்ள பெரிய சவால். நான் முன்மொழிந்த வழிகள் சிலருக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இன்னும் சில வருடங்களுக்குள்ளாகவாவது வெள்ளையர்களின் மனதில் தோன்றியிருக்கும் இனத் துவேஷத்தை இன வேற்றுமையாகக் குறைத்தாக வேண்டும்.
மேலே குறிப்பிட்ட மும்முனை தாக்குதலும் இந்தியாவிலும் உள்ளது. பங்களாதேஷிலிருந்து வந்துள்ள குடியேறிகள், தாலிபான்களின் அட்டகாசங்கள், நாத்திகர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகளின் பெரும்பான்மை விரோத நடவடிக்கைகள் ஆகியவற்றைக் கட்டுபடுத்துவதும், இவர்களாலேயே தோன்றும் கடும்போக்கு வலதுசாரிகளின் வன்முறைகளைக் கட்டுபடுத்துவதும் இன்று நமக்குள்ள மிகப் பெரிய சவால்.