வாய் புற்றுநோயை தடுக்கும் காபி

                                     வாய் புற்றுநோயை தடுக்கும் காபி

   வாய், தொண்டையில் ஏற்படக்கூடிய புற்றுநோயை தினமும் 4 கப் வரை காபி குடிப்பதால் தடுக்க முடியும் என்று ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. பல்வேறு வகையான புற்றுநோய்களுடன் காபிக்கு உள்ள தொடர்பு பற்றி அமெரிக்காவில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 5,139 புற்றுநோயாளிகளும், ஆரோக்கியமான 9,028 பேரும் பங்கேற்றனர். ஆரோக்கியமான பிரிவினரில் ஒரு குழுவுக்கு தினமும் 4 கப் காபி தரப்பட்டு வந்தது. 


புற்றுநோயாளிகளும் காபி அருந்தி வர செய்யப்பட்டனர். குறிப்பிட்ட கால இடைவெளியில் காபி குடித்து வந்தவர்கள், குடிக்காதவர்கள் இருதரப்பினரிடமும் மருத்துவ ஆய்வு நடத்தப்பட்டது. தினசரி 4 கப் காபி குடித்து வந்த ஆரோக்கியமானவர்களுக்கு வாய், தொண்டை புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு 40 சதவீதம் குறைந்திருந்தது தெரிய வந்தது.  காபி குடித்து வந்த புற்றுநோயாளிகளின் நோய் தீவிரம் கட்டுபடுத்தப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. எனினும், புகை, மது, ஒழுங்கற்ற உணவு பழக்கம் கொண்டவர்களுக்கு காபியால் எந்த பயனும் இல்லாதது தெரிந்தது. காபியில் நோய் எதிர்ப்பு தன்மை (ஆன்டி ஆக்சிடன்ஸ்) இருப்பதே, வாய், தொண்டை புற்றுநோயை தடுக்க காரணம் என்று ஆய்வில் நிபுணர்கள் தெரிவித்தனர்