பலாத்கார வழக்கு: 3 பேருக்கு 10 ஆண்டு சிறை


கணவருடன் சினிமாவுக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண்ணை கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்த 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத்  தண்டனை விதிக்கப்பட்டது.÷செஞ்சியை அடுத்த நாகந்தூரை சேர்ந்தவர் விஜி. இவர் தனது மனைவி அஞ்சலை (23), தாயார் லட்சுமி ஆகியோருடன் கடந்த 10-09-2006 அன்று அருகில் உள்ள ரெட்டணைக்கு சினிமாவுக்கு சென்றார்.÷சினிமா முடிந்து இரவு சுமார் 10.30 மணிக்கு திரும்பி வரும்போது, செஞ்சி மரூரைச் சேர்ந்த முருகன் (27), அருள் (27), சேகர் (45) ஆகிய 3 பேரும், விஜி மற்றும் லட்சுமியை தாக்கிவிட்டு, அஞ்சலையை தூக்கிச் சென்று அருகில் இருந்த மாந்தோப்பில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.÷இவ்வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சின்னப்பன், 3 பேருக்கும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 25,800 அபராதமும் விதித்து புதன்கிழமை தீர்ப்பளித்தார்.