பிரஞ்சு பேரரசர் தலைமுடி 19 ஆயிரம் டொலர்களுக்கு ஏலம்

         பிரஞ்சு பேரரசர் தலைமுடி 19 ஆயிரம் டொலர்களுக்கு ஏலம்

நியூசிலாந்தில் நடைபெற்ற ஏலத்தில் தலைமுடி ஒன்று 19 ஆயிரம் டொலர்களுக்கு வாங்கப்பட்டது.
அந்த தலைமுடி சாதாரண தலைமுடியல்ல. பிரஞ்சு பேரரசர் நெப்போலியனின் தலைமுடிதான் அது. நியூசிலாந்தில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த அந்த தலைமுடி தற்போது ஏலம் விடப்பட்டு அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளது.
நெப்போலியனின் கடைசி காலத்தில் அவர் தலையிலிருந்து உதிர்ந்த தலைமுடியாக இது கருதப்படுகிறது.