லட்சாதிபதிகள் இந்தியாவில் எவ்வளவு பேர்?
மும்பை : இந்தியாவில் மட்டும், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர், லட்சாதிபதிகளாக உள்ளனர்; கோடீஸ்வரர்கள் 10 பேர் உள்ளனர். கோடீஸ்வரர்கள் ஒவ்வொருவரின் சொத்து மதிப்பு, குறைந்த பட்சம் மூன்று லட்சத்து 55 ஆயிரத்து 205 கோடி ரூபாய்."மெரில் லின்ச் க்ளோபல் வெல்த் மேனேஜ்மென்ட் அண்டு கேப்ஜெமினி' என்ற தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்திய மக்கள் தொகையில் 10 ஆயிரம் பேருக்கு ஒருவர், நான்கு கோடி ரூபாய் சொத்து மதிப்பு உடையவராக இருக்கிறார்.கடந்த 2008ல், இந்த எண்ணிக்கை 84 ஆயிரமாக இருந்தது. 2007ல் இத்தொகை ஒரு லட்சத்து 23 ஆயிரமாக இருந்தது. உலகிலேயே ஹாங்காங்கில் தான் 20 லட்சம் லட்சாதிபதிகள் உள்ளனர்.இதையடுத்து சீனா மற்றும் ஜப்பானில் அதிகளவில் லட்சாதிபதிகள் உள்ளனர். ஒட்டுமொத்த ஆசியாவில், தற்போது 30 லட்சம் லட்சாதிபதிகள் உள்ளனர்.இந்தியாவில் கோடீஸ்வரர்கள் 10 பேர் உள்ளனர். அவர்களின் சொத்து மதிப்பு, மூன்று லட்சத்து 55 ஆயிரத்து 205 கோடி ரூபாயிலிருந்து ஆறு லட்சத்து ஐந்தாயிரத்து 77 கோடி ரூபாய் வரை உள்ளது.
இவர்களின் அனில் அம்பானியின் சொத்து மட்டும் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 556 கோடி ரூபாய். இவரையடுத்து விப்ரோவின் அசிம் பிரேம்ஜி, வேதாந்தா குழுமத்தின் அனில் அகர்வால் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.பொதுவாக உலகளவில் கோடீஸ்வரர்கள் அதிகமாக முதலீடு செய்வது அமெரிக்காவில் தான். அதையடுத்துள்ள நாடுகள் ஜப்பான் மற்றும் ஜெர்மனி.