சீனா- பாக்., அணுசக்தி ஒப்பந்தம்; அமெரிக்கா ரெட் சிக்னல்

                சீனா- பாக்., அணுசக்தி ஒப்பந்தம்; அமெரிக்கா ரெட் சிக்னல்

வாஷிங்டன்: அணுசக்தி பாதுகாப்பு முகமையிடம் பாகிஸ்தான் கொண்டு வரும் ஒப்பந்த வரைவுக்கு அமெரிக்கா தலை அசைக்காது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் 2 அணு உலைகள் அமைக்க அந்நாடு சீனாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் அணு மூலப்பொருள் விநியோக நாடுகள் கொண்ட குழுவின் முன்பாக ஒப்புதலுக்கு வரவிருக்கிறது,46 நாடுகள் கொண்ட இந்த குழு கூட்டம் அடுத்த வாரம் நியூஸிலாந்தில் நடக்கிறது.
இந்த கூட்டத்தில் பாகிஸ்தான்- சீனா ஒப்பந்தம் கொண்டு வரப்படும் போது அமெரிக்கா இதனை ஆதரிக்காது என அமெரிக்க செய்தி தொடர்பாளர் கார்டன் டூ கெய்டு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் கூறியிருப்பதாவது: இந்த உடன்பாடு அணு ஆயுத பரவல் தடை சட்டத்திற்கு எதிரானது என்றும், அமெரிக்கா தரப்பில் வலியுறுத்தி கூறப்பட்டிருக்கிறது.இதனை சீனா ஏற்று கொள்ளும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.