குறிப்பிட்ட இடங்களில் கிரகங்கள் நிற்கப் பலன்கள்

*    பாக்கிய ஸ்தானாதிபதி அந்த ஸ்தானத்திற்கு திரிகோணங்களான 1, 5, 9 ல் இருக்க அமைந்த ஜாதகனுக்கு பொருள் சேர்க்கையும் நிலம், தோப்பு மற்றும் அரண்மனை போன்ற வீடு இவை அமைந்து மகிழ்வுடன் வாழ்வான். தான தருமம் மற்றும் கோயில் பணிகள் செய்து பேரும் புகழும் அடைவான். அதே சமயத்தில் லக்னாதிபதி 6, 8, 12 ல் மறைய தனவிரயமும் பூர்வீக சொத்துக்கள் நஷ்டமும் உண்டாகும்.

*    5, 6 க்குடைய கிரகங்கள் 3 ல் நிற்க அவர்களைப் பாவர் நோக்க அந்த ஜாதகனுக்கு பிள்ளைகள் இருக்காது. ஆனால் குரு பகவான் பார்வை பெற குழந்தைகள் உண்டாகும்.

*    குரு, சந்திரன், சுக்கிரன் ஆகியோர் 5ல் நிற்க அமையப் பெற்ற ஜாதகன் இவ்வுலகில் சிறப்புடன் வாழ்வான். யோகங்கள் உண்டு. குரு 5ல் தனித்து நிற்க புத்திர பாக்கியம் குறைவு. சந்திரன் 5ல் தனித்திருக்க பெண் குழந்தைகள் உண்டு.

*    மேற்சொன்ன மூவரும் 2, 11ம் இடங்களில் இருந்தால் அந்த ஜாதகன் உத்தமனாகவும் கீர்த்திமானாகவும் விளங்குவான். பல வாகனங்களும் சேரும். பல வித்தைகளில் சிறந்து விளங்குவான். புதையலும் தனமும் கிட்டும்.

*    சுக்கிரன் கேந்திர ஸ்தானமான 4ல் இருந்தால் யோகங்கள் அதிகம் உண்டாகும். வாகனங்கள் சேரும். பூமி லாபம் பெறுவான். சுக போகங்களை அனுபவிப்பான். அதே சமயத்தில் பாவக்கிரகமான சனி 10ம் இடத்தில் இருந்தால் அந்த ஜாதகனுக்கு பிரபல யோகம் உண்டாகும்.

*    சந்திரனுக்கு 6, 7, 8 ஆகிய இடங்களில் சுபக் கிரகங்கள் நிற்கப் பிறந்த ஜாதகன் சிறந்த பலன்களும் நலமான வாழ்வும் அடைவான். மந்திர சக்தியும் பெறுவான். அரசாங்க நன்மைகளும் உண்டாகும். இருப்பினும் லக்னாதிபதி வலுப்பெறாவிட்டால் மேற்கண்ட யோகங்கள் உண்டாகாது.

*    சூரியன், சனி, பாக்கியாதிபதி இவர்கள் 6ம் இடத்தில் நிற்க அந்த ஜாதகனுக்கு திரவியம் அதிகம் உண்டு. மற்ற இடங்களில் இருந்தாலும் நகைச்சுவை, நடிப்பு போன்ற துறைகளில் சிறந்து விளங்குவான் என்பதாகும்.

*    குருவுடன் புதன் சேர நல்ல பாக்கியங்கள் அடைந்து உத்தமனாவான். சுக்கிரனுடன் புதன் சேர்ந்தால் பெரியோர்கள் நட்பு பெற்றவனாகவும், சிறந்த பாடகனாகவும் விளங்குவான். சனியோடு புதன் சேர பெரிய தனவானாவன். மேலும் எதிரி பயமோ விஷ பயமோ இல்லாமல் அதிக பொருள் சேர்ப்பான். இவர்கள் சேர்க்கை சுப ஸ்தானங்களில் இருக்க நன்மை பயக்கும்.

*    சனி, செவ்வாய், சந்திரன், புதன் இவர்கள் சேர ஜாதகனுக்கு நீண்ட ஆயுள் உண்டு. எனினும் சோம்பேறியாகவும், வருமானம் இல்லாதவனாகவும் அலைச்சல் அடைவான். சொந்த வீடு இருக்காது. இவர்களை குரு பார்க்க மேற்கண்ட துயரங்கள் நீங்கி நற்பலன்கள் உண்டாகும்.

*    சூரியன், புதன் இவர்கள் சேர்ந்து 1,4,8 ஆகிய இடங்களில் நிற்க குருவும் 10ம் அதிபதியும் நோக்க அந்த ஜாதகன் பெரும் செல்வம் அடைந்து புகழடைவான். பூமி, வாகனம் அமைந்து ஏவலாட்கள் பணி செய்வர்.