பெரும்பாலான நல்லவர்கள் தங்கள் ஆயுள் முழுவதும் துன்பப்படுவது ஏன்?




கேள்வி : பெரும்பாலான நல்லவர்கள் தங்கள் ஆயுள் முழுவதும் துன்பப்படுவது ஏன்?
                                                நாராயணன் சிங்கப்பூர்




     எப்போதுமே நமக்குச் சங்கடம் தருவனவற்றைத் துன்பம் என்கிறோம், சந்தோஷம் தருவனவற்றை இன்பம் என்கிறோம், வாழ்வில் பலமுனைகளில் போராடி வெற்றி பெறும்போது நம்மால்தான் இந்த வெற்றி அடைந்தோம் என எண்ணி கர்வப்படுகிறோம், மாறாக தோல்வி அடைந்தாலோ என்ன பாவம் செய்தேன் நான் ஏன் எனக்கு தோல்வியைத் தந்தாய் இறைவா எனக் கூவி இறைவன் மீது பழிபோடுகிறோம். இதுதான் மனித இயல்பு, இன்பத்தில் இறைவனுக்கு நன்றி கூறாதவன் துன்பத்தில் மட்டும் இறைவன் மீது பழிபோடுவது ஏன்? நீங்கள் கேட்டது நல்லவர்கள் துன்பப்படுவது ஏன் என்றுதானே? ஒருவன் நல்லவன் கெட்டவன் என நாம் எப்படி முடிவு செய்ய முடியும்? அவனவனுக்கு அவனவன் நல்லவனே, யாராவது தன்னைத் தீயவன் என்று கூறிக்கொள்கிறார்களா? கொலைகாரன் கூட தனக்கென ஒரு நியாயம் வைத்திருப்பான், நல்லவன் கெட்டவன் என்று யாரும் இல்லை,  நன்மைக்குள் தீமையும் தீமைக்குள் நன்மையும் கலந்தே இருப்பதுதான் கடவுளின் சிருஷ்ட்டி யாரும் முழுமையான கெட்டவனாகவோ நல்லவனாகவே இருக்க இயலாது அதேப் போலவே எந்தவொறு மனித வாழ்விலும் துன்பம் மட்டுமேதான் வந்துள்ளது என்று சொல்லவும் முடியாது புற்றுநோயாளியின் வாழ்க்கையிலும் வசந்தம் உண்டு இன்பம். துன்பம் என்று எதுவும் இல்லை, ஒவ்வொன்னையும் நாம் எடுத்துக் கொள்ளும் மன நிலையைப் பொருத்தே உள்ளது,


source http://ujiladevi.blogspot.com/2010/10/blog-post_19.html