திபெத் பேரரசர் கல்லறைகள்

சீனாவின் திபெத்தினம், நீண்டகால வரலாறு உடையது. திபெத்தின மக்கள், பனி மூடிய பீடபூமியில் வாழ்ந்து, அற்புதமான, வினோதமான திபெத்தினப் பண்பாட்டை உருவாக்கியுள்ளனர். Tobo அரச பரம்பரை, திபெத் வரலாற்றில் மிக வலிமையான அரச பரம்பரையாகும். அதன் பல்வேறு வம்சங்களின் பேரரசர்கள், திபெத்தின் லோகாப் பிரதேசத்தில் திபெத் பேரரசர் கல்லறைகளில் புதைக்கப்பட்டனர்.
லோகாப் பிரதேச நிர்வாக அலுவலகம் இருக்கின்ற Zedong மாவட்டத்திலிருந்து மேற்குத் திசையில் 30 கிலோமீட்டர் தூரத்தில், Tobo அரச பரம்பரையின் பேரரசர்களின் கல்லறைகள் உள்ளன. இங்கு தான், திபெத்தின் மிகப் பெருமளவிலான பேரரசர் கல்லறைகள் இருக்கின்றன. அது, லோகாவின் Qiongjie மாவட்டத்துக்கு எதிரேயுள்ள Pire மலையில் இருக்கிறது. இங்கு பரந்த தரையும், இதமான காலநிலையும், அழகான காட்சிகளும் காணப்படுகின்றன. முற்காலத்தில், இதுவே, பழங்காலத் திபெத்தினம் தோன்றிய இடம் ஆகும். லோகாப் பிரதேசத்தின் சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் Qiulin கூறியதாவது,


திபெத் பேரரசர் கல்லறைகளில், 7வது நூற்றாண்டுகள் முதல் 9வது நூற்றாண்டுகள் வரையான காலத்தில் ஆட்சி புரிந்த பேரரசர்களும் அவர்களது பேரரசிகளும் அமைச்சர்களும், புதைக்கப்பட்டுள்ளனர். அவை, 30 இலட்சத்து 50 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவுள்ள இடத்தில் இருக்கின்றன. வரலாற்றுப் பதிவின்படி, இங்கு 21 கல்லறைகள் இருக்க வேண்டும் என்று Qiulin கூறினார்.
Tobo அரச பரம்பரை, சீன வரலாற்றில் ஒரு காலத்தில் செழுமையாக இருந்தது. பல்வேறு வம்சங்களின் திபெத் பேரரசர்கள் அதிகப்படியான செல்வத்தைச் செலவழித்து, உன்னத மண்டபங்கள், கோயில்கள் மற்றும் கல்லறைகளைக் கட்டியமைத்தனர். இப்போது, தரையில் கட்டியமைக்கப்பட்ட கட்டிடங்கள் இல்லை. உயரான இடத்தில் திபெத் பேரரசர் கல்லறைகளைப் பார்க்குமளவு, மலையில் கட்டியமைக்கப்பட்ட கல்லறைகள், சில குன்றுகளாக மட்டுமே உள்ளன. ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் அவை எதிர்கால தலைமுறையினரால் பார்வையிடப்பட்டு, ஆராயப்படுவதற்கு மதிப்புக்குரியவை.
வரலாற்றுப் பதிவின்படி, ஒவ்வொரு திபெத் பேரரசர் கல்லறையிலும் அதிக மதிப்புள்ள தொல்பொருட்களும் நகைகளும் புதைக்கப்பட்டுள்ளன. அவை, Tobo வரலாறு மற்றும் பண்பாட்டை ஆராயும் அரிய பொருட்களாகும்.

திபெத் வரலாற்றில் தலைசிறந்த பேரரசர் Songtsan Gamboவின் கல்லறை, திபெத் பேரரசர் கல்லறைகளில் மிகப் பெரிய கல்லறையாகும். அதற்கு அருகில் ஒரு சிறிய கோயில் உள்ளது. Songtsan Gambo, அவரது மனைவிகளான Wencheng மற்றும் Khri b'Tsun இளவரசிகள் ஆகியோரின் சிற்பங்கள், அங்கு வைக்கப்பட்டுள்ளன. தற்போது, 5 துறவிகள் இக்கோயிலில் தாங்கி வருகின்றனர். அவர்களே, அதனை பாதுகாத்து வருகின்றனர்.

43 வயதுடைய Yeshe Dorje, கல்லறையின் பாதுகாப்பாளராக இருந்து, 10 ஆண்டுகள் ஆகியுள்ளது. அவர் கோயிலில் தாங்கி, உலகில் பல்வேறு இடங்களைச் சேர்ந்த பயணிகளுக்கு, திபெத் பேரரசர்களின் கதைகளை விளக்கிக் கூறி வருகின்றார். நாள்தோறும், அவர் 4 அல்லது 5 மணி நேரம், அனைத்து கல்லறைகளையும் சுற்றி, அவற்றில் நாசமாகி இருக்கும் நிலைமையை சோதனையிடுவதாக Yeshe Dorje கூறினார்.

நாள்தோறும் நான் இங்கு திபெத்தினப் பிரதேசங்களைச் சேர்ந்த திருப் பயணிகளை வரவேற்று உபசரித்து வருகிறேன். தவிர, சில தூய்மைப்படுத்தும் பணிகளிலும் ஈடுபட வேண்டும். அதே வேளையில், கல்லறைகளின் பாதுகாப்பாளர் பணியிலும் ஈடுபடுகின்றேன். இங்கு, அதிகமான பேரரசர்களின் கல்லறைகள் இருக்கின்றன. பாதுகாப்பாளராக, நான் அதிகப் பொறுப்புகளை ஏற்றுள்ளேன் என்று Yeshe Dorje கூறினார்.

வரலாற்றில், பாதுகாப்பாளர்கள் அனைவரும், திபெத் பேரரசர்களின் பக்கத்திலேயே கையாளராக பதவி ஏற்றார்கள். ஒருவர் பேரரசரின் பாதுகாப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அது அவரது குடும்பத்தினருக்கும் மிகவும் பெருமை தரும் விடயமாகும். ஆனால், பாதுகாப்பாளரைப் பொறுத்த வரை, அது ஒரு கடினமான பணியாகும். அவர்கள், ஆயுட் காலம் முழுவதும், வெளி மக்களுடன் தொடர்பு கொள்ளக் கூடாது.
Yeshe Dorje திபெத் பேரரசர்கல்லறைகளுக்கு எதிர் திசையிலுள்ள Qiongjie மாவட்டத்தில் பிறந்தார். அவரது மாமா, இக்கல்லறைகளின் பாதுகாப்பாளராக இருந்தார். மாமா மரணமடைந்த பின், அவர் இங்கு வந்து பாதுகாப்பாளர் பொறுப்பு ஏற்றார். அவர் கூறியதாவது,

நான் இங்கு பாதுகாப்பாளர் பணியில், 10 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளேன். தொடர்ந்து இப்பணியில் ஈடுபடுவேன் என்று Yeshe Dorje கூறினார்.
பல திபெத்தின மக்களைப் பொறுத்த வரை, திபெத் பேரரசர் கல்லறைகள், புனிதம் நிறைந்த இடங்களாகும். இதுவே, திபெத்தினப் பண்பாட்டின் தோற்றுவாயாகும். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான திபெத்தியர், திபெத், சிங்காய், கான்சூ, யூன்னான், சிச்சுவான் முதலிய பிரதேசங்களிலிருந்து திபெத் பேரரசர்களின் கல்லறைகளுக்குச் சென்று, மூதாதையரை வழிபட்டு வருகின்றனர்.
நவீனமயமாகி வரும் இன்றைக்கு, இந்தக் கல்லறைகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய செழுமையை இன்னும் வெளிக்காட்டுகின்றன. மேலதிக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள், இங்கு வந்து திபெத் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும் என்று Yeshe Dorje விருப்பம் தெரிவித்தார்.