இமயமலையில் இடம் வாங்கினார் ரஜினி

                               இமயமலையில்  இடம் வாங்கினார் ரஜினி

    இல்லறம் பாதி, துறவறம் மீதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. வருடத்திற்கொரு முறையாவது இமயமலை பயணம் மேற்கொள்வது அவருக்கு பிடித்த விஷயம் என்று ரஜினியின் ஆன்மீக பெருமைகளை அடுக்கினால், ‘அதான் தெரியுமே. வேற சொல்லு’ என்பார்கள் வாசகர்கள். எனவே ஜம்ப்…
அந்த இமயமலை அடிவாரத்திலேயே ஒரு இடத்தை வாங்கியிருந்தார் சூப்பர் ஸ்டார். பிற்காலத்தில் அங்கு ஒரு ஆசிரமம் நிறுவி துறவிகளுக்கு நிழல் கொடுக்க வேண்டும் என்பது அவரது திட்டமாம். இடத்தை வாங்கி பல மாதங்கள் ஆகியிருந்தும், அதை தனது பெயருக்கு ரிஜிஸ்தர் செய்வதில் அவ்வளவு ஸ்பீடு காட்டவில்லை அவர். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் அந்நிலத்தை ரிஜிஸ்தரும் செய்துவிட்டாராம்