
இவர்களை மற்ற இந்து பிரிவுகள் அங்கிகரிக்கவில்லை காரணம் இவர்களுடைய பிணங்களை உண்ணும் பழக்கமும், போதை வஸ்துக்களை உபயோகிக்கும் போக்கும்
தீமைகளை அழிக்கும் கடவுளான சிவனையே தங்கள் முதலும் கடைசியுமான தெய்வமாக அகோரிகள் வழி படுகிறார்கள்.இந்த நில உலகில் தென் படுகின்ற கல்லும்,மரமும்,மிருகங்களும் ,தோன்றுகின்ற ஒவ்வொரு எண்ணங்களிலும் சிவன்..சிவனை தவிர வேறொன்றும் இல்லை என்பதுதான்
இறந்து போன மனித உடலை கங்கை கரை ஓரத்தில் எரிப்பதும், கங்கை நீரில் வீசுவதும் இறந்து போன மனிதனை சொர்கத்திற்கு கொண்டு செல்லும் என்பது வழி வழியாக இந்து சமயத்தில் பின்பற்றப்படும் ஒரு நம்பிக்கை
அகோரிகள் இப்படி வீச படும் உடலை கங்கையிளிரிந்து வெளியே இழுத்து அவற்றை உண்கிறார்கள்...எரிந்தும் எரியாத பிணங்களை உண்கிறார்கள் .அவர்களை பொறுத்துவரை இறந்து போன உடல் உலக்கத்திற்க்கு உதவாத குப்பை மற்றவர்களுக்கு வேண்டுமானால் அது மனித உடலாக இருக்கலாம்
அமானுஷ்ய சக்திகளை கடுமையான தாந்தரிக பயிற்சியினாலும்,கடின மன உறுதியினாலும் பெரும் அகோரி சாதுக்களை ..வழி படுவதற்கும் ஆசி பெறுவதற்கும் பலர் காடும் மலையும் தேடி செல்வது வழக்கம்.
அகோரி பாபாக்களின் உலகம் வேறு..மனித கபால ஓட்டில் உண்பதும் ,குடிப்பதும் இவர்களுடைய தினசரி நடவடிக்கையில் ஒன்றாக இருக்கும்.உடலுக்கு ஆடை ஏதும் அணியாமல் மனித எலும்புகளால் ஆன மாலையும் ,இடது கையில் மண்டை ஓட்டையும் ,வலது கையில் மணியும் கொண்டு திரிவது இவர்களுடைய அடையாளம் .
ஒற்றை காலில் பலமணி நேரம் நிற்கும் அகோரிகள், நெருப்பில் படுத்து கொண்டு புன்னகைக்கும் அகோரிகள், மனதின் எல்லையற்ற சக்தியை வெளிகொணர்ந்து காட்டும் அகோரி பாபாக்கள் இன்றும் கங்கை கரை ஓரத்திலும், வாரனாசியின் ( காசியின்) உள்ளேயும் காண இயலும் .