நயன்-பிரபு

                                       நயன்-பிரபு

     நயன்தாராவும் பிரபு தேவாவும் வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றி வருகிறார்கள். தற்போது இருவரும் பிரான்சில் உள்ளனர்.
தமிழகத்திலும் வெளிமாநிலங்களிலும் சுதந்திரமாக நடமாட முடியவில்லை என்ற ஆதங்கம் அவர்களுக்கு இருக்கிறது. ஐதராபாத்தில் நட்சத்திர ஓட்டல்களில் ரகசியமாக தங்கினர். அது பிரபுதேவா மனைவி வரைக்கும் தெரிய வந்துள்ளது. சென்னையிலும் ஒன்றாக வசிக்க முடியவில்லை. இருவரும் தனிகுடித்தனம் நடத்த பிரபுதேவா வீடுபார்த்தார். அதுவும், நடக்க வில்லை.
இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்து விட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது. திருமண கோலத்தில் இருப்பது போன்ற படமும் இண்டர் நெட்டில் வெளியாயின. அவற்றை அவர்கள் மறுக்க வில்லை. பிரபுதேவா தனது மனைவி ரம்லத்திடம் ஒரே ஒரு தடவை மட்டும் நயன்தாராவை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள அனுமதி தரவேண்டும் என்றும் சம்மதம் கேட்டார். ஆனால் ரம்லத் பிடிவாதமாக மறுத்ததால் அதன் பிறகு இந்த விஷயம் பற்றி அவரிடம் பேசுவதே இல்லை.
சென்னைக்கு வரும் நாட்களில் அண்ணாநகரில் உள்ள தனது வீட்டுக்கு சென்று ரம்லத் மற்றும் குழந்தைகளுடன் தங்குகிறார். பிறகு எந்த ஊருக்கு செல்கிறேன் என்பதை சொல்லாமலேயே புறப்பட்டு சென்று விடுகிறார். அவரது நடவடிக்கைகள் மர்மமாக இருப்பதால் ரம்லத்தால் வெளிப்படையாக எதுவும் கேட்க முடியவில்லை.
ரம்லத் மற்றும் ரசிகர்கள் கண்களில் சிக்காமல் இருப்பதற்கும் சந்தோஷமாக சுற்றுவதற்கும் வெளிநாடுகளே சிறந்தவை என கருதுகின்றனர்.எனவே தான் அடிக்கடி அயல்நாடுகளுக்கு பறக்கிறார்கள்.பிரபுதேவாவுக்கான செலவுகள் அனைத்தையும் நயன் தாராவே கவனித்துக் கொள் கிறாராம். இதனால் அவரிடம் இருந்த பெரும் தொகை கரைந்து போய் விட்டது என்கின்றனர். நிதிநெருக்கடியிலும் சிக்கியுள்ளாராம். தனது ஆடம்பர “பி.எம்.டபுள்யூ” வெளிநாட்டு காரை விற்பதற்காக விலை பேசி வருவதாகவும் கிசுகிசுக்கள் பரவியுள்ளன.