அமெரிக்கா வீடுகளிலும் பூசணிக்காய் கட்டி வைக்கிறார்கள்

  அமெரிக்கா வீடுகளிலும் பூசணிக்காய் கட்டி வைக்கிறார்கள்


   பூசணிக்காய் மகத்துவம் அமெரிக்கா வந்த பின் தான் தெரிகிறது.சென்னையில், வீடுகளில் திருஷ்டிப் பூசணிக்காய் கட்டித் தொங்க விடுவதைக் கேலியாகப் பார்த்த காலம் உண்டு.“முப்பதாயிரம் ஸ்பேர் பார்ட்ஸில் ஓடாத லாரியா, இத்துனூண்டு எலுமிச்சம் பழத்தில் ஓடப் போகுது-ன்னு” விவேக் கேட்பாரே, அது போலத் தான் வைச்சிக்குங்களேன்.பூசணிக்காய் சுத்திப் போடுதல், ஆயுத பூஜை பூசணிக்காய்…எல்லாம் பாத்து பாத்து அலுத்துப் போன எனக்கு,இங்கும் பூசணிக்காயா?ஆமாம். எல்லா வீடுகளிலும் பூசணிக்காய் (பூசணிப்பழம்) கட்டி வைக்கிறார்கள்.ஏன்? எதற்கு?என்ன ஆச்சு இந்த அமெரிக்காவுக்கு.