நகைகள் போடுங்கள்

                                 நகைகள் போடுங்கள்    நகைகள் உடலில் உள்ள முக்கிய உறுப்புகளின் வர்ம சிறப்புப் புள்ளிகளை தூண்டுவதால் உடலில் சீரடைகிறது சக்தி ஓட்டம்! எனவே நோய்கள் ஓட்டம்! ஆகவே ஆபரணம் அணிய நாட்டம் வரும். எனவே நலவாழ்வு நம்
நகைகளில்! என்னென்ன நகைகள் அணிவதால் எந்தெந்த நோய்கள்
 தாக்காமல் தடுக்கலாம் என அறிவோம். இடுப்புக்கு மேலே தங்க நகைகளும், இடுப்புக்கு  கீழே வெள்ளி நகைகளும் அணிய வேண்டும். வெள்ளி இரத்த ஓட்டத்தை துள்ளி ஓடச் செய்யும்.

கண்கள் காக்கும் கம்மல் காது குத்தி கம்மல் போடுவதால் கண்ணிற்கான வர்மப் புள்ளி தூண்டப்படுகிறது.

காதில் நிறைய சிறப்புப் புள்ளிகள் உள்ளன. எனவேதான் பிள்ளையாரை வணங்கும் போது இரு காதுகளையும் கைகளால் பிடித்து தோப்புக் கரணம் போடுகிறோம். இதனால் மன அமைதி கிடைக்கிறது. மூளை மீண்டும் மீண்டும் புத்துணர்வோடு செயல்பட  ஏதுவாகிறது. எனவேதான் முன்னோர்கள் ஆரோக்கியத்தோடு ஆணை முகத்தோன் வணங்குதலையும் வழக்கப் படித்தியுள்ளார்கள்! நன்றாய் நாள்தோறும் பழக்கப் படித்தியுள்ளார்கள்!