"ராமர் நீரூற்று'

                                                       "ராமர் நீரூற்று'

  மதுரை: அறிவியல் முன்னேற்றத்தால், மருத்துவ துறையில் பல அதிசயங்கள் நிகழ்த்தப்பட்டு வரும் இந்த காலத்திலும், கிராமப்புறங்களில் நோய் வாய்ப்பட்டவர்கள் கை வைத்தியம், கடவுள் நம்பிக்கையில் காலத்தை தள்ளுகின்றனர். மதுரை அருகே உள்ள நீரூற்று ஒன்று, நோயை தீர்ப்பதாக நம்புகின்றனர்.  மதுரை, சோழவந்தானை அடுத்துள்ளது நாராயணபுரம். இங்குள்ள நாகமலை அடிவாரத்தில் ஒரு நீரூற்று உள்ளது. மூலிகை மருத்துவ குணம் கொண்ட இந்த நீரூற்றில் குளித்தால், தோல், படை, சிரங்கு, வயிறு தொடர்பான நோய்கள் தீரும் என்கின்றனர். பல 100 ஆண்டுகளாக இருந்து வரும் இந்த அதிசய நீரூற்று குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, "ராமர் வனவாசம் சென்றிருந்த போது, சீதைக்கு தாகம் எடுத்தது.  உடனே, தனது அம்பை எய்து, ராமர் இந்த நீரூற்றை உருவாக்கி. சீதையின் தாகத்தை தீர்த்தார். இதனால் தான், இந்த நீரூற்றுக்கு "ராமர் நீரூற்று' என்று பெயர் வந்தது' என்றனர்.