பய‌னர் பெயரை தேடித்தரும் இணையதளம்

பய‌னர் பெயரை தேடித்தரும் இணையதளம்



புதியதொரு இணைய சேவையை பார்த்து வியந்து போய் அதனை பயன்படுத்த விழையும் போது உறுப்பினராக பதிவு செய்து கொள்ளுங்கள் என்று கூறப்படுவதால் நொந்துபோன அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா?

பதிவு செய்வது கூட பிரச்சனை இல்லை.ஓவ்வொரு முறை பதிவு செய்யும் போது குறிப்பிட்ட ஒரு பயனர் பெயரையும் தேர்வு செய்ய வேண்டியிருப்பது தான் உண்மையில் சிக்கலானது.

அதிலும் வலைப்பின்னல் சேவை தளங்களில் ப‌யன்படுத்த சுவாரஸ்யமான மற்றும் தனித்தன்மை வாய்ந்த பயனர் பெயர் தேவைப்படலாம்.
புதிது புதிதாக பயனர் பெயரை யோசிக்க முடியவில்லை என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் கவலையை விடுங்கள் அதற்கென்றே ஒரு இணையதளம் இருக்கிறது.

மையூச‌ர்நேம் ஜென‌ரேட்ட‌ர் என்ப‌து அந்த‌ த‌ள‌த்தின் பெய‌ர்.இந்த‌ த‌ள‌த்தில் உள்ள‌ க‌ட்ட‌த்தின் மூல‌ம் உங்க‌ளுக்கான‌ பிர‌த்யேக‌ ப‌ய‌ன‌ர் பெய‌ரை உருவாக்கிகொள்ள‌லாம்.

அந்த‌ பெய‌ர் நீள‌மானாதாக  இருக்க‌ வேண்டுமா,சின்ன‌தாக‌ இருக்க‌ வேண்டுமா,மிக‌ மிக‌ நீள‌மாக‌ இருக்க‌ வேண்டுமா என‌ப‌து போன்ற‌வ‌ற்றையும் தேர்வு செய்ய‌ முடியும்.

அதே போல‌ வெளிநாட்டு மொழி சார்ந்த‌ பெய‌ர்களையும் உருவாக்கிகொள்ள‌லாம்.


http://www.myusernamegenerator.com/