பூனையொன்றை திருமணம் செய்த ஜெர்மனிய நபர்

       பூனையொன்றை திருமணம் செய்த ஜெர்மனிய நபர்
ஜெர்மனியில் நபர் ஒருவர் பூனையொன்றை திருமணம் செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பத்து வருடங்களாக வளர்த்து வந்த சிசிலியா என்ற பூனையை, ஜெர்மனியைச் சேர்ந்த ஊவ் மிட்செர்லிச் என்ற 39 வயதுடைய நபர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

உத்தியோகப் பற்றற்ற முறையில் இந்த திருமணம் ஜெர்மனியில் நடைபெற்றதாகவும், பிராணிகளை திருமணம் செய்வது கொள்வது ஜெர்மனியில் சட்டப்படி குற்றமாகும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

நோய்வாய்ப்பட்ட குறித்த பூனை நீண்ட காலம் உயிர் வாழாது என மிருக வைத்தியர்கள் அறிவித்ததனைத் தொடர்ந்து, தனது செல்லப் பிராணியை மணம் முடிக்கத் தீர்மானித்ததாக ஊவ் மிட்செர்லிச் தெரிவித்துள்ளார்.

இந்த விசித்திரமான திருமண வைபவத்தை நடாத்துவதற்காக ஜெர்மனிய நடிகை ஒருவருக்கு மிட்செர்லிச் 300 யூரோக்களை வழங்கியுள்ளார்.