செயற்கை இதயம்

                                                     செயற்கை இதயம்


   விஞ்ஞானிகள் துடிக்கும் செயற்கை இதயத்தை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளனர். இதன்மூலம் விரைவில் செயற்கை இதயம் உருவாக்கப்படலாம் என்று தெரிகிறது! பார்க்கப்போனால் செத்தவனைக் கூட உயிர்ப்பித்துத் தந்துவிடுவார்கள் இந்த விஞ்ஞானிகள். ஒருபுறம் இந்தமாதிரியான ஆய்வுகள் ஆச்சரியத்தைக் கொடுத்தாலும் இவைகளின் முடிவை நினைக்கப் பயமாயிருக்கத்தான் செய்கிறது! விரைவில் மனிதனுக்கு மறுசுழற்சி (Recycling) நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!