ராஜஸ்தான் மாநிலம் முழுதும் கடும் கோடை வெப்பம்
ராஜஸ்தான் மாநிலம் முழுதும் கடும் கோடை வெப்பம் காரணமாக நீராதாரங்கள் வற்றி வருவதால் விலங்குகள் பலியாகிவருகின்றன.
குரங்குகள், மான்கள் உள்ளிட்ட விலங்குகள் குடிக்க நீர் இல்லாமல் பலியாகி வருவதாக செய்திகள் வந்துள்ளன.
புகழ்பெற்ற ரந்தம்போர் தேசியப் பூங்கா அருகில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கடந்த 3 நாட்களில் 13 குரங்குகள் பலியாகியுள்ளன.
எல்லை மாவட்டமான பார்மரில் மான்கள் சில தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக பலியானதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ராஜஸ்தான் வனத்துறை வனவிலங்குகள் மீது அக்கறை செலுத்துவதில்லை என்று குற்றம்சாற்றிய இந்திய விலங்குப் பாதுகாப்பு அமைப்பு உறுப்பினர் நரேஷ் கத்யான் 22க்கும் மேற்பட்ட ஒட்டகங்களும் குடிநீர் இல்லாமல் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.