பாதி அளவு உள்ள மனித பொம்மை அல்ல உயிருள்ள ஒரு மனிதர்

 பாதி அளவு உள்ள மனித பொம்மை அல்ல உயிருள்ள ஒரு மனிதர்
 


படத்தில் நீங்கள் பார்ப்பது பாதி அளவு உள்ள மனித பொம்மை அல்ல உயிருள்ள ஒரு மனிதர்.

சீனாவைச் சோ்ந்த பெங் ஷுலினிற்கு 1995- இல் வியட்நாமில் நடந்த சம்பவம் அது.

சாலை ஓரமாக சென்றுக் கொண்டிருந்த பெங் ஷுலின் மீது லாரி மோதிய போது தடுமாறி விழுந்த பெங் ஷுலின் உடலின் மேல் லாரி ஏறியதில் வயிற்றுப் பகுதி கீழே பாதி துண்டாக்கி விட்டது.

ஏகப்பட்ட இரத்தம் வெளியேறிவிட்டது. பெங் ஷுலின் உயிர் பிழைக்கமாட்டார் என்று அங்கிருந்தவர்கள் நினைத்திருந்தனர்.

வலியில் துடித்துக் கொண்டிருந்த பெங் ஷுலின் தன் அருகே துண்டாகி கிடந்த கால்களையும், வயிற்கு கீழ் பகுதியையும் பார்க்க முடிந்தது. அவரால் கணப்பொழுதில் நடந்த சம்பவத்தை புரிந்து கொள்ள முடிந்தது. தன் அருகே தன்னுடைய பாதி சிதைந்த உடல்…

எப்படி இருந்திருந்திருக்கும் பெங் ஷுலினுக்கு?

பிழைக்க மாட்டார் என்ற அவநம்பிக்கையுடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கடுமையான போராட்டத்திற்கு பின் டாக்டர்கள் பெங் ஷுலினைக் காப்பாற்றிவிட்டனர்.

தற்போது பெங் ஷீலினின் உயரம் 78 செ.மீ மட்டுமே.
வயிற்றுக்கு கீழே எந்த பகுதிகளும் இல்லை. அந்த பகுதிகளை மூடுவதற்காக பெங் ஷுலின் தோல்களை கொஞ்சம் கொஞ்சமாக வெட்டியெடுத்து மூடிவிட்டார்கள்.

இதற்காக 20- டாக்டர்கள் கொண்ட மருத்துவ குழுவால் பெங்ஷீலினுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஏகப்பட்ட அறுவை சிகிச்சைகள்.

அடுத்த கட்டமாக படுக்கையிலேயே இருந்த பெங் ஷுலினுக்கு நிற்பதற்கும், நடப்பதற்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நீண்ட காலத்திற்கு பின் ஒரளவு நடக்கும் முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டார்.

இந்நிகழ்ச்சி மருத்துவ உலகத்தின் அதிசயம் என்கிறார்கள்.

உடலில் சின்ன பாதிப்பு என்றாலும் அனைவரும் சோர்ந்து பொய் தன்நம்பிக்கை இழந்து விடுவார்கள்.

ஆனால் இதற்கு மாற்றமாக பெங் ஷுலினோ தன் உடலின் பெரும்பகுதியை இழந்தும் தன்னம்பிக்கையுடன் வாழ்கிறார்.