9 வயதே ஆன சீனச் சிறுமி ஆண் குழந்தை பெற்றெடுத்திருக்கிறாள  ஒன்பது வயதே ஆன சீனச் சிறுமி ஆண் குழந்தை பெற்றெடுத்திருக்கிறாள். பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு சிறுமி தான் மிகச் சிறிய வயதில் குழந்தை பெற்றவள் என்று சாதனை குறிப்புகள் கூறும் நிலையில் சீனச் சிறுமியின் பிரசவம் அங்கே பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
சீனாவில் உள்ள ஜிலின் மாகாணத்தில் இருக்கிறது சாங்சுன் மருத்துவமனை. ஜனவரி 25 ஆம் தேதி மாலை இந்த மருத்துவமனை வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதன் மகப்பேறு பிரிவில் ஒன்பது வயதான ஒரு சிறுமி 8.5 மாத கர்ப்பத்துடன் அனுமதிக்கப்பட்டாள். ஜனவரி 27 ஆம் தேதி செய்யப்பட்ட சிசேரியன் பிரசவத்தில் கிட்டத்தட்ட 3 கிலோ எடை உள்ள அழகான ஆண் குழந்தையை அந்தச் சிறுமி பெற்றெடுத்தாள்.
இச்சிறுமியின் பிரசவத்தை மருத்துவமனை நிர்வாகம் மறைக்கப் பார்த்தாலும் விஷயம் வெளியில் கசிந்துவிட்டது. அந்தச் சிறுமி சோங்கியான் என்ற பகுதியைச் சேர்ந்தவள் என்பதும் தெரியவந்துள்ளது. ஆனால் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பது மட்டும் இன்னும் தெரியவரவில்லை.சீன நாட்டுச் சட்டப்படி 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கர்ப்பமானாலே அது கற்பழிப்புக் குற்றத்திற்குக் கீழேதான் வரும். அப்படியிருக்க 9 வயது பெண் குழந்தை பெற்றது அங்கே பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
9 வயதான பெண் கர்ப்பமாவதும், அவளுக்கு பிரசவம் எளிதாக நடந்து குழந்தை பெற்றெடுப்பதும் அரிதானவை. ஆயினும் அது சமுதாயத்திற்கு அவமானம்.