முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்றது

     முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்றது


                            செங்காங் : சிங்கப்பூரின் செங்காங் பகுதியில் உள்ள அருள்மிகு வேல்முருகன் ஞானமுனீஸ்வரர் திருக்கோயிலில் ஜூன் 11ம் தேதியன்று ஆனி உத்திர பெருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்றது. மாலையில் ராஜ அலங்காரத்தில் முருகப் பெருமான் உள்வீதி வந்தது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. இதே போன்று விஸ்வநாதரும், விசாலாட்சி அம்மையாரும் பல்லக்கில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதனைத் தொடர்ந்து முருகப் பெருமானுக்கும், விசாலாட்சி அம்பாள் சமேத விஸ்வநாதருக்கும் மகா தீபாராதனை நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அர்ச்சனைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் மகாபிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.