
இராணுவ வெற்றியை கொண் டாடும் முகமாக கொழும்பு காலிமு கத்திடலில் விசேட நிகழ்வுகள் நேற்று நடைபெற்றன.நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஜனாதிபதி காலை 8.28 மணிக்கு அங்கு வருகை தந் தார். அவரை சபாநாயகர் சமல் ராஜபக்ச, பாதுகாப்புச் செயலாளர் கோத் தபாய ராஜபக், ஜனாதிபதி செய லாளர் லலித் வீரதுங்க மற்றும் முப் படைத்தளபதிகள் வரவேற்றனர்.
அதன் பின்னர் 8.30 மணிக்கு தேசிய கொடியேற்று நிகழ்வைத் தொடர்ந்து இராணுவ அணிவகுப்பு இடம் பெற்றது. அதனையடுத்து உரையாற்றிய போதே ஜனாதிபதி மகிந்த ராஜபக் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறுகையில், சற்று முன்னர் நான் தேசிய கொடி ஏற்றிவைக்கும் போது ஒரு வருடத்திற்கு முன்னர் உயிரிழந்த இராணுவ வீரர்களின் இறுதி மூச்சை உணர்ந்தேன்.
எமது நாட்டை இரண்டாக பிளவு படுத்த விடுதலைப் புலிகள் மட்டும் முயற்சி செய்யவில்லை. நாடாளு மன்றத்திலும் அதற்கான முயற்சி நடந்தது.எந்தவொரு காரணத்திற்காக வும் எப்போதும் எமது தாய் நாட்டை பிளவுபடுத்த இனிமேல் நான் இட மளிக்கமாட்டேன். வீரம் என்பது எமது பாரம்பரியத்தில் ஊறிவிட்ட ஒன்று. அதனை பிறதேசங்களில் இருந்து இறக்குமதி செய்யத் தேவை யில்லை. தாய் நாட்டிற்காகவும் அதன் இறை மைக்காகவும் மக்களுக்காகவும் போராடிய வீரமைந்தர்கள் எமது இராணுவ வீரர்கள். அவர்களைக் காட்டிக் கொடுப்பதை போன்ற மாபெ ரும் தேசத்துரோகம் வேறு எதுவும் இல்லை.
இரண்டு இலட்சம் படைவீரர்கள் கடந்த 4 வருடங்களாக ஊணின்றி உறக்கம் இன்றி செய்த தியாகத் தின் காரணமாகவே நாம் கொடிய பயங்கரவாதத்தை தோற்கடித்து உலக அரங்கில் நிமிர்ந்து நிற்கி றோம்.இதேபோன்றதொரு தியாகத்தை எமது அரசாங்க ஊழியர்களும் செய்வார்கள் ஆனால் ஆசியாவி லேயே ஆச்சரிய நாடாக எமது இலங் கையை மாற்றியமைக்க முடியும்.
எமது உள்நாட்டுப் பிரச்சினைகளை நாமே தீர்த்துக்கொள்வோம். இதில் வெளிநாட்டவர்கள் தலையிட நாம் அனுமதியோம். பயங்கரவாதத்தின கொடூரத் தை அனுபவித்த நாடுகளில் இலங் கையர்களின் பங்கு துயரம் மிக்கது. பயங்கரவாதத்திற்கு எந்த நாடுகள் துணை போகின்றனவோ அந்த நாடுகளே பயங்கரவாதத்தால் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றன.
படையினரின் உயிர் தியாகங் கள் மூலம் பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் அடைந்த வெற்றியின் பிரதிபலன்களை வடபகுதி மக்கள் அடைந்து மகிழ்ச்சி அடைய வேண்டும். அதற்கான ஆக்கபூர்வ நட வடிக்கைகளில் அரசாங்கம் ஈடு பட் டுள்ளது. இதன் அடிப்படையில் இவ் வருட இறுதிக்குள் யுத்தத்தால் சிதைவடை ந்த வடபகுதி முழுவதும் வழமைக்கு திரும்பிவிடும் என எதிர்பார்க்கிறேன்.
கடந்த 30 வருட காலப் போராட் டத்தின் காரணமாக நாம் நாட்டை பிரிவினையிலிருந்து விடுவித்துள் ளோம். இனியும் இந்த நாட்டை பிளவு படுத்த எவருக்கும் இடமளியோம். எமது நாட்டு மக்கள் யுத்தம் காரண மாக இழந்த அனைத்தையும் மீண் டும் பெற்றுக் கொள்ள மகிந்த சிந் தனை மூலம் வழியேற்படுத்தியுள்ளோம்.
நாட்டிலுள்ள சகல இன மக்களை யும் ஐக்கியப் படுத்தும் நோக்குடனே யே இந்த தேசிய விழா கொண்டா டப்படுகின்றது. வெளிநாடுகளின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்து எமது சுதந்திரங்களை பறிகொடுத்து உதவிகளைப்பெற நாம் தயார் இல்லை.
நாட்டுக்காக நாம் இரத்தமும் கண்ணீரும் சிந்துவதை தவிர்க்க முடியாது. இவ்வாறான தியாகங் கள் மூலம் இந்த நாட்டில் அண் மைக்காலத்தில் வீரதீர சரித்திரம் படைத்தவர்கள் எமது படையினர். அவர்கள் மரணித்த பின்னர் ஏனை யவர்களை போல் சமாதிகளில் உறங்க மாட்டார்கள். இந்த நாட்டின் மக்களின் இதயங்களில் வாழ்வார்கள்.
இறுதிக் கட்ட யுத்தம் நடைபெறும் போது வெள்ளைக் கொடி ஏந்தி வந்த வர்களை கொலை செய்ததாக எமது வீரர்கள் காட்டிக்கொடுக்கப்பட்டிருக் கிறார்கள். அது எந்த வகையில் உண் மை என்பது யாவருக்கும் தெரியும்.
ஒரு கையில் துப்பாக்கி, மறுகை யில் மனிதாபிமானம் என யுத்தத் தை நடத்திய எமது வீரர்களை எவ் வாறு காட்டிக்கொடுக்க முடியும்? எந்தவொரு சாதாரண பிரஜை யையும் தனது துப்பாக்கியால் கொலை செய்யாதவர்கள் எமது இராணுவ வீரர்கள். நான் அனைத்து மக்களையும் சமமாகவே பார்க்கிறேன் எனத் தெரிவித்தார்.