புதிய உலக சாதனை

                புதிய உலக சாதனை

     பிரான்ஸ் சாகஸக் கலைஞரான தாயிக் கிறிஸ், கால்களில் பொருத்தப்பட்ட சறுக்கு உபகரணம் மூலம் சறுக்கிச் செல்வதில் சனிக்கிழமை புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

அவர் சர்வதேச பிரபல "ஈபில்" கோபுரத்தின் 40 மீற்றர் உயரத்திலிருந்து அக்கோபுரத்தில் பொருத்தப்பட்டுள்ள குழாயில் சறுக்கி இந்த சாதனையை நிறைவேற்றியுள்ளார்.

தாயிக் கிறிஸின் பாதுகாப்புக்காக தரையில் இராட்சத காற்றுப்பை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

கோபுர குழாயில் வேகமாக சறுக்கிவந்த தாயிக் கிறிஸ் 12.5 மீற்றர் (41 அடி) உயரத்திலிருந்து காற்றுப் பை மீது குதித்து இந்த சாதனையை நிறைவேற்றியுள்ளார்.

இதன் மூலம் அவர் ஏற்கனவே ஈபில் கோபுரத்தின் 8.53 மீற்றர் உயரத்திலிருந்து அமெரிக்கரான டான்னி வேயால் நிறைவேற்றப்பட்ட சாதனையை முறியடித்துள்ளார்.