உலகின் மிகப் பெரிய தங்க நாணயம்

           உலகின் மிகப் பெரிய தங்க நாணயம்

            உலகின் மிகப் பெரிய தங்க நாணயம் 03 மில்லியன் பவுண்டுகளுக்கு ஏலத்தில் விற்பனை ஆகி உள்ளது. 01 மில்லியன் கனேடிய டொலர்கள் முகப்பெறுமதி உடைய ஐந்து தங்க நாணயங்களை கனேடிய திறைசேரி 2007 ஆம் ஆண்டு வெளியிட்டிருந்தது.

இவை ஒவ்வொன்றின் எடை 100 கிலோ. இவை ஒவ்வொன்றும் உலகின் மிகப் பெரிய தங்க நாணயங்களாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தன. இவற்றில் ஒரு நாணயம் வியன்னாவில் ஏலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை விற்பனைக்கு வந்தது.

அப்போதே ஸ்பானிய நிறுவனம் ஒன்று இதை வாங்கியது. போட்டிக்கு யாருமே ஏலம் கோரவில்லை. வாங்க வந்தவர்களை விட இதைப் பார்வையிட வந்திருந்தோரே அதிகமானவர்கள். இந்த நாணயத்தை வாசகர்களின் பார்வைக்குச் சமர்ப்பிக்கிறோம்