விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகள் சனி கிரகத்தின் மிகப்பெரிய நிலவான டைட்டனில் உயிர்வாழும் சாத்தியக்கூறுகளை கண்டுபிடித்துள்ளனர். அங்கு வாழும் ஏலியன்ஸ் (ALIENS- வேற்றுக்கிரக மனிதர்கள்) டைட்டனின் வளிமண்டலத்திலிருந்து வரும் ஹைட்ரஜனை அவர்கள் சுவாசிப்பதாக கண்டுபிடித்துள்ளனர்.
விண்வெளியில் சனிகிரகத்தின் மீது ஆராய்ச்சி செய்து வரும் காசினி (CASSINI) விண்கலம் முலம் இதனை கண்டுபிடித்துள்ளனர். முன்னதாக 3200மைல் அகலம் கொண்ட டைட்டன் நிலவில் ஆர்கானிக் கெமிக்கலான மீத்தேன் ( METHANE ) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
தற்போது அங்கு வாழும் உயிரினம் மீத்தேனை மூலதனமாக கொண்டு வாழ்வதாகவும் மனிதர்களை போன்று தண்ணீரை மூலதனமாக கொண்டு வாழவில்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பிரபல அறிவியல் இதழான ஜகேரஸ் ( ICARUS )எழுதியள்ளதாவது டைட்டனின் அட்மாஸ்பியரில் கீழே ஹைட்ரஜன் மறைவதாகவும் இதனை ஏலியன்கள் சுவாசிக்ககூடும் என தெரிவித்தனர்.
இதன்மூலம் நமது சூரியக்குடும்பத்தில் ( SOLAR SYSTEM ) பூமியைத் தவிர மற்றும் ஒரு உயிர்கள் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.