முருகா! முருகா!
| ராகம்-நாட்டைக்குறிஞ்சி) | தாளம்-ஆதி | |
| பல்லவி முருகா!-முருகா!-முருகா! | ||
சரணங்கள் | ||
| 1. | வருவாய் மயில்மீ தினிலே வடிவே லுடனே வருவாய்! தருவாய் நலமும் தகவும் புகழும் தவமும் திறமும் தனமும் கனமும் | (முருகா) |
| 2. | அடியார் பலரிங் குளரே அவரை விடுவித் தருள்வாய்! முடியா மறையின் முடிவே!அசுரர் முடிவே கருதும் வடிவே லவனே! | (முருகா) |
| 3. | சுருதிப் பொருளே,வருக! துணிவே,கனலே,வருக! கருதிக் கருதிக் கவலைப் படுவார் கவலைக் கடலைக் கடியும் வடிவேல். | (முருகா) |
| 4. | அமரா வதிவாழ் வுறவே அருள்வாய்!சரணம்,சரணம் குமரா,பிணியா வையுமே சிதறக் குமுறும் சுடர்வே லவனே,சரணம்! | (முருகா) |
| 5. | அறிவா கியகோ யிலிலே அருளா கியதாய் மடிமேல் பொறிவே லுடனே வளர்வாய்!அடியார் புதுவாழ் வுறவே புவிமீ தருள்வாய் | (முருகா) |
| 6. | குருவே!பரமன் மகனே! குகையில் வளருங் கனலே! தருவாய் தொழிலும் பயனும் அமரர் சமரா திபனே! சரணம்!சரணம்! | (முருகா) |
