சித்தர்களின் வழிமுறை

                                           சித்தர்களின் வழிமுறை
              தென்னிந்தியாவில் முற்காலத்தில் இறையுணர்வில் முழுமையடைந்து, உயரிய இறைநிலை எய்திய, மருத்துவம், ரசாயனம், இயற்கை விஞ்ஞானம், தத்துவம் போன்ற பல துறைகளிலும் சிறந்து விளங்கிய மகான்களை சித்தர்கள் என்று அழைக்கிறோம்.

இந்த சித்தர்கள் யார்? அவர்களது நோக்கம் என்ன? அவர்களது பயணம் எதை நோக்கி? இதை பற்றிய ஒரு பார்வை ...
சித்தர்கள்வழிபடும் கடவுள் சிவபெருமானாகும்.அவரே முதல் சித்தன் என்று அழைக்கப்படுகிறார் சித்தர்களுள் தலைமை சித்தராக அகத்தியர் அறியப்படுகிறார்.சித்தர்களின் உண்மை பெயர் வரலாறுகளில் இல்லை. அவர்களின் ஊர் பெயரிலோ அல்லது வேறு காரண பெயரிலேயே அழைக்கப்படுகின்றனர். முற்காலத்தில் உயரிய இறைநிலையை எய்தியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் அவர்களில் பதினெட்டு சித்தர்கள் மட்டுமே முன்னிலைபடுத்தபட்டு உள்ளார்கள்.
ஆனால் சித்தர்கள் எண்ணிக்கை பதினெட்டிற்கும் மேற்படும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. சித்தர்கள் அனைவருமே, தாம் உயர்நிலை எட்டியது மட்டுமின்றி, உலக மக்கள் நலனுக்காக பல விதங்களிலும், உயரிய நுட்பங்களை வெளிப்படுத்தியதன் மூலமும், தம்முடைய காலத்தில் பிறருக்காக செயல்கள் புரிந்தும், சேவை புரிந்துள்ளனர்.

பதினெட்டுச் சித்தர்கள் ..
நந்தி தேவர்,அகஸ்தியர்,திருமூலர்,போகர்,கொங்கனவர்,
மச்சமுனி,கோரக்கர்,சட்டமுனி,சுந்தரானந்தர்,ராம தேவர்,
குதம்பை,கருவூரார்,இடைக்காடர்,கமலமுனி,பதஞ்சலி,தன்வந்தரி,
பாம்பாட்டி,வால்மீகி.
இந்தப் பட்டியல் சித்தர்களின் பெரிய ஞானக் கோவை போன்ற நூல்களிலிருந்து எடுக்கப்பட்டது.

இந்தப் பட்டியலில் உள்ள சித்தர்கள் தவிர புலஸ்தியர், புலிப்பானி, புன்னக்கீசர், கொங்கணர், பூனைக்கண்ணார், காளாங்கி நாதர், அழுக்காணி, தேரையார், ரோமரிஷி ஆகியோரும் சிலரது கூற்றுப்படிபதினென் சித்தர்களே. இவர்களில் புலஸ்தியர், காளாங்கி நாதர், அழுக்காணி போன்றோர் பட்டியலில் உள்ளசிலருக்கு குருவாகவும் இருந்திருக்கிறார்கள். இதன் மூலம், இவர்களும் எவ்விதத்திலும் குறைந்தவர்களல்லஎன்பதை அறியலாம்.

இவர்கள் எண்ணங்களைக் கடந்த உயர்நிலையை எட்டியவர்கள்.மொழி,இன பாகுபாடுகளுக்குள் அடைபடுபவர்கள் அல்ல.இவர்களுடைய ரிஷிமூலமும் அறியப்படவில்லை.மேலும் தங்களுடைய இறையுணர்வால், உலகிலுள்ள எந்த மொழியிலும் உடனடியாக தம் கருத்துக்களை இவர்களால் வெளிப்படுத்த முடியும், என்று நம்பப்படுகிறது.

பிறப்பினால் வரும் சாதித் தீட்டுக்கள், சடங்குகள், சிலை வழிபாடு, கோயில் வழிபாடு, போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஆகியவற்றில் உள்ள தவறுகள் பற்றி தெளிவான ஆணித்தரமான கருத்துக்களை முதன்முதலில் சித்தர் பாடல்களில் தான் பார்க்கிறோம். இதனாலேயே ஆச்சாரமான இந்துக்கள் சித்தர் பாடல்களை ஒதுக்கியதாக சித்தர் வரலாற்றை அறிந்தவர்கள் கூறுவர்.

சித்தர் பாடல்களில் இறைவனை உணர்தல், மருத்துவம் , மூலிகைகள், பற்றிய பல விபரங்களைப் பரிபாஷைகளாக வைத்துள்ளனர். இதனால் இறை உணர்வு நிறைந்தவர்களுக்கு எட்டும் படியாக இந்தப் பாடல்கள்