மியன்மாரில் கடந்த வாரம் வெள்ளை யானை ஒன்று அதிகாரிகளால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வெள்ளை யானை மிகவும் அரிதான விலங்கினங்களில் ஒன்றாகும். அரசியல் மாற்றத்தின் சகுனமாக வெள்ளை யானைகள் வரலாற்றில் காலங்காலமாகப் பேசப்பட்டு வருகின்றன.
இந்த பெண் வெள்ளை யானை கடந்த சனிக்கிழமை மியன்மாரின் Rakhine மாநிலத்தில் உள்ள Maungtaw என்கிற கடலோரப் பிரதேசத்தில் வைத்துக் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. இதன் வயது சுமார் 38. உயரம் ஏழு அடி, நாலு இஞ். மியன்மார் அரசர்கள் வெள்ளை யானைகளை கிடைத்தற்கரிய பொக்கிசங்களாகப் பாதுகாத்து வந்திருக்கிறார்கள்.
நல்ல அரசியல் மாற்றம், செழிப்பான எதிர்காலம் ஆகியவற்றின் அடையாளங்களாக நம்பப்படுகின்றன. 1962 ஆம் ஆண்டிலிருந்து மியன்மாரில் இராணுவ ஆட்சி இடம்பெற்று வருகின்றது.சுமார் இரு தசாப்த காலங்களின் பின்னர் இந்த ஆண்டு அங்கு தேர்தல் இடம்பெற உள்ளது. இன்னமும் தேர்தல் திகதி அறிவிக்கப்படவில்லை.

